சென்செக்ஸ் 140 புள்ளிகளும், நிப்டி 11,477 புள்ளியாகவும் சரிந்தது!

ரூபாய் மதிப்பு 71.96 ரூபாயாகச் சரிந்துள்ள நிலையில் இந்திய பங்கு சந்தை குறியீடுகளும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 139.61 புள்ளிகள் என்ன 0.37 சதவீதம் சரிந்து 38,018.31 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 43.35 புள்ளிகள் என 0.38 சதவீதம் சரிந்து 11,476.95 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

மும்பை பங்கு சந்தையினைப் பொருத்த வரையில் டெலிகாம், ஹெல்த்கேர், ஆட்டோமொபைல் மற்றும் பவர் துறை பங்குகள் மட்டும் லாபம் அளித்துள்ளன. அதே நேரம் எப்எம்சிஜி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

இன்றைய சந்தை நேர முடிவில் யெஸ் வங்கி, வேதாந்தா, அதானி போர்ட்ஸ், விப்ரோ, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் பங்குகள் லாபம் அளித்து இருந்தன. அதே நேரம் கோல் இந்தியா, ஹீரோ மோட்டோ கார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், கோடாக் வங்கி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் நட்டம் அளித்து இருந்தன.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 72 ரூபாயினைத் தொட உள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 77.43 டாலர் ஒரு பேரல் என்றும், WTI கச்சா எண்ணெய் 69.87 டாலர் ஒரு பேரல் எனவும் விலை உயர்ந்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Sensex Reports its Sixth Consecutive Session of Decline on Rupee Woes