இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை முதலே நல்ல ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் வரை உயர்ந்து 77,654 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 264 புள்ளிகள் உயர்ந்து 24,200 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Advertisement

நீண்ட நாட்களுக்கு பின் இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகம் முடியும் வரை பச்சை நிறமாகவே காட்சி தந்தது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. சுமார் 2000க்கும் அதிகமான பங்குகள் இங்கு வலுவான வர்த்தகத்தை பார்த்தன. இன்றைய சந்தை ஏற்றத்திற்கு ஐடி துறை நிறுவனங்களின் பங்குகளே முக்கிய காரண. ஐடி நிறுவனங்களின் லாப விகிதம் மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்த பாசிட்டிவான எதிர்பார்ப்புகள் எழுந்ததால் முதலீட்டாளர்கள் அதிகமாக ஐடி பங்குகளை வாங்கினர். இதனால் முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் கணிசமான உயர்வை கண்டன.நிஃப்டி ஐடி குறியீடு 2% மேல் உயர்ந்தது.

Advertisement

டிசிஎஸ் பங்கு மதிப்பு 3.2%, இன்போசிஸ் பங்கு மதிப்பு 4.1% ,ஹெச்சிஎல் டெக் 2%, விப்ரோ 2% என உயர்வு கண்டன. உலகம் முழுவதுமே ஐடி பங்குகள் சில தினங்களாக ஏற்றம் கண்டு வருகின்றன. அதே தான் இன்றைய தினம் இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. அதே வேளையில் ஆசிய மற்றும் உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் இந்திய சந்தையிலும் பிரதிபலித்தது.

தலைமுடி முதல் பாம்பு விஷம் வரை: இந்தியாவுல இப்படி கூட பிஸ்னஸ் நடக்குதா? நோட் பண்ணுங்கப்பா..

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் இன்று வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகளிலும் ஓரளவு முதலீடு காணப்பட்டது, இது சந்தை வளர்ச்சிக்கு உதவியது. ஏனெனில் கடந்த பல மாதங்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளை முதலீடுகளை திரும்ப பெற்றதே சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

Advertisement
நம்ம வங்கி கணக்குல இப்படி ஒரு விஷயம் நடக்குது தெரியுமா? வங்கிகளுக்கு கொள்ளை லாபம்.. ஆனா நமக்கு..??

நிஃப்டி தொடர்ந்து 24,000 புள்ளிகளுக்கு மேலேயே நீடித்தால் பங்குச்சந்தை இன்னும் மேலே செல்ல வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீல், ஸ்விக்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் இன்று கணிசமாக உயர்ந்தன. இன்றைய பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவோரின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. வரும் நாட்களில் இந்த நிலை நீடிக்குமா என்பது அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பை பொறுஇத்தே அமையும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித அறிவிப்புகளை வெளியிட உள்ளது. அதற்கு ஏற்ப தான் நாளை பங்குச்சந்தை ஏற்றமும் இறக்கமும் இருக்கும்.

Advertisement

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.