பிளாட்டாக முடிந்த பங்கு சந்தை..!

இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் பிளாட்டாக முடிந்து இருந்தாலும் இன்று புதிய உச்சத்தினையும் தொட்டது. சர்வதேச சந்தையில் இருந்து மந்தமான வர்த்தகச் சூழல், ரூபாய் மதிப்பு உயர்வு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தை உயர்வு போன்றவை சந்தையில் என்ன மாதிரியான தாக்கத்தினை எல்லாம் ஏற்படுத்தியுள்ளன என்று இங்குப் பார்ப்போம்.

இன்றைய பங்கு சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 7 புள்ளிகள் என 0.02 சதவீதம் உயர்ந்து 38,285.75 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 19.15 புள்ளிகள் என 0.17 சதவீதம் உயர்ந்து 11,570.90 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

துறை வாரியான நிலவரம்

மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் மின்சாரம், ஹெல்த்கேர், யூடிலிட்டிஸ், எனர்ஜி மற்றும் ஐடி துறை பங்குகள் லாபமும், ரியலிட்டி, மெட்டல், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் டெலிகாம் துறை பங்குகள் நட்டம் அளித்துள்ளன.

லாபம் அளித்த பங்குகள்

கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, எண்டிபிசி, சன் பார்மா, விப்ரோ மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் லாபம் அளித்துள்ளன.

நட்டம் அளித்த நிறுவனங்கள்

டாடா ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலீவர், வேதாந்தா, மஹிந்தரா & மஹிந்தரா, பார்தி ஏர்டெல், யெஸ் வங்கி பங்குகள் நட்டம் அளித்தன.

Have a great day!
Read more...

English Summary

Share Market Ends With Flat