ஆர்பிஐ வங்கி ரெப்போ விகிதத்தினை உயர்த்தி பங்கு சந்தை சாதனைகளை நிறுத்தியது..!

ஆர்பிஐ ரெப்போ விகிதத்தினைப் புதன்கிழமை உயர்த்தியதை அடுத்து இந்திய பங்கு சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தது. ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் என 6.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இது பங்கு சந்தையின் மீது எப்படித் தாக்கத்தினை எப்படி ஏற்படுத்தியுள்ளது என்று இங்குப் பார்க்கலாம்.

பங்கு சந்தை நிலவரம்

சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 84.96 புள்ளிகள் என 0.23 சதவீதம் சரிந்து 37,521.62 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 10.30 புள்ளிகள் என 0.09 சதவீதம் சரிந்து 11,346.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.

துறை வாரியான நிலவரம்

ஹெல்த்கேர், எண்ணெய் & எரிவாயு மற்றும் எப்எம்சிஜி துறை பங்குகள் லாபம் அளித்த நிலையில் ஆட்டோமொபைல், மெட்டல், வங்கி மற்றும் மின்சாரத் துறை பங்குகள் நட்டத்தினை அளித்தன.

லாபம் அளித்த நிறுவனங்கள்

கோல் இந்தியா, டிசிஎஸ், சன் பார்மா, ஐடிசி, பவர் கிரிட், ஓஎன்ஜிசி பங்குகள் லாபம் அளித்தன.

நட்டம் அளித்த பங்குகள்

வேதாந்தா, பார்தி ஏர்டெல், மாருதி, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், எச்டிஎப்சி பங்குகள் நட்டத்தினை அளித்தன.

Have a great day!
Read more...

English Summary

Stock Market Ends Record Run After RBI Raises Repo Rate