அடுத்த வாரம் ஜூன் 11 முதல் 15 வரை எந்த பங்குகளை எல்லாம் வாங்கலாம் & விற்கலாம்!

இந்திய பங்கு சந்தை வெள்ளிக்கிழமை பிளாட்டாக முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 19.41 புள்ளிகள் என 0.05 சதவீதம் சரிந்து 35,443.67 ரூபாய் ஆகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 0.70 புள்ளிகள் என 0.01 சதவீதம் சரிந்து 10,767.65 ரூபாய் ஆகவும் வர்த்தகம் ஆனது.

எனவே வரும் வாரம் எந்தப் பங்குகளை எல்லாம் வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற வல்லுநர்களின் பரிந்துரைகளை இங்குப் பார்ப்போம்.

கிலென்மார்க் பார்மா

கிலென்மார்க் பார்மா நிறுவனப் பங்குகளை 552 முதல் 557 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 590 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் 532 ரூபாய் எனவும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

லூபின் லிமிடெட்

லூபின் நிறுவனப் பங்குகளை 804 முதல் 812 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 884 ரூபாய் வரை லாபம் அளிக்கும் என்றும் ஸ்டாப் லாஸ் 768 ரூபாய் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜோதி லெபாரட்ரீஸ்

ஜோதி லெபாரட்ரீஸ் பங்குகளை 424 முதல் 428 ரூபாய் வரை அளித்து வாங்கினால் 455 ரூபாய் வரை லாபம் அளிக்க வாய்ப்புள்ளது என்றும் ஸ்டாப் லாஸ் 408 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

மகாநகர் கேஸ் லிமிடெட்

மகாநகர் கேஸ் நிறுவனப் பங்குகளை 841 முதல் 848 ரூபாய்க்குள் வாங்கும் போது 896 ரூபாய் வரை உயரும் என்றும் ஸ்டாப் லாஸ் 808 ரூபாய் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பவர் கிரிட் கார்ப்ரேஷன் இந்தியா லிமிடெட்

பவர் கிரெட் கார்ப்ரேஷன் நிறுவனப் பங்குகள் 197.5 முதல் 199.5 ரூபாய் ஆக இருக்கும் போது விற்கலாம் என்றும் ஸ்டாப் லாஸ் 206 ரூபாய் என்றும், டாட்கெட் 187 ரூபாய் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பு

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.

Have a great day!
Read more...

English Summary

Stocks Recommendation For 11th June to 15th June, 2018