அடுத்த வாரம் மே 21 முதல் 25 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் & விற்கலாம்?

கர்நாடக தேர்தலில் நடைபெற்ற குழப்பங்களுக்குச் சனிக்கிழமை தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் & ஜேடிஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் திங்கட்கிழமை பங்கு சந்தை சரியும் நிலை உள்ளது.

வெள்ளிக்கிழமை பங்கு சந்தை முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 300.82 புள்ளிகள் என 0.86 சதவீதம் சரிந்து 34,848.30 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 86.30 புள்ளிகள் என 0.81 சதவீதம் சரிந்து 10,596 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த வாரம் மே 21 முதல் 25 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் & விற்கலாம் என்று இங்குப் பார்க்கலாம்.

ரூபா & கம்பெனி

நீண்ட கால முதலீடாக ரூபா & கம்பெனி எனப்படும் உள்ளாடை உற்பத்தி நிறுவனப் பங்குகளை 431 ரூபாய்க்கு வாங்கினால் 470 ரூபாய் வரை உயரும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஸ்டாப் லாஸ் 411 ரூபாய் ஆகும்.

விற்க வேண்டிய பங்குகள்

எஸ்கார்ட்ஸ் லிமிடெட், குஜராரத் ஸ்டேட் பெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ், வொக்கார்ட், மாருதி சுசூகி பங்குகளை விற்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறிப்பு

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.

Have a great day!
Read more...

English Summary

Stocks Recommendation For 21st May to 25th May, 2018