இந்த வாரம் ஜூலை 23 முதல் 27 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்!

சென்ற வாரம் பங்கு சந்தை முடிவில் இந்திய பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 145.14 புள்ளிகள் என 0.40 சதவீதம் உயர்ந்து 36,496.37 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 53.10 புள்ளிகள் என 0.48 சதவீதம் சரிந்து 11,010.20 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.

எனவே இந்த வாரம் எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற வல்லுநர்களின் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.

விஐபி இண்டஸ்ட்ரீஸ்

விஐபி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை 426 முதல் 430 வரை கொடுத்து வாங்கினால் 462 ரூபாய் வரை உயரும். ஸ்டாப் லாஸ் 409 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஜூப்ளியண்ட் ஃபுட் வொர்க்ஸ்

ஜூப்ளியண்ட் ஃபுட் வொர்க்ஸ் நிறுவனப் பங்குகளை 1648 முதல் 1482 ரூபாய்க்குள் வாங்கினால் 1560 ரூபாய் வரை உயரும். ஸ்டாப் லாஸ் 1418 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சன் பார்மா

சன் பார்மா பங்குகளை 555 ரூபாய் முத 560 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 591 ரூபாய் வரை உயரும். ஸ்டாப் லாஸ் 536 ரூபாய் என வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எல்&டி ஃபினான்ஸ் ஹோல்டிங்ஸ்

எல்&டி ஃபினான்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளை 153 முதல் 156 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 165 ரூபாய் வரை உயரும்.ஸ்டாப் லாஸ் 147 ரூபாய் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஹீரோ மோட்டோ கார்ப்

ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகளை விற்கலாம் என்றும், ரேஞ் 3380-3410 ரூபாய் என்றும், டார்கெட் 3200 ரூபாய் என்றும், 3524 ரூபாய் ஸ்டாப் லாஸ் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறிப்பு

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.

Have a great day!
Read more...

English Summary

Stocks Recommendation For 23rd July to 27th July, 2018