அடுத்த வாரம் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்!

பங்கு சந்தை வெள்ளிக்கிழமை முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 84.96 புள்ளிகள் என 0.22 சதவீதம் சரிந்து 38,251.80 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 4.30 சதவீதம் என 0.04 சதவீதம் சரிந்து 11,566.60 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

எனவே வரும் வாரம் எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற வல்லுநர்களின் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.

டாடா கெமிக்கல்ஸ்

டாடா கெமிக்கல்ஸ் பங்குகளை 724 முதல் 730 வரை இருக்கும் போது வாங்கலாம் என்றும் டார்கெட் 755 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 709 ரூபாய் என்றும் வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஸ்ரீ சிமெண்ட் லிமிட்டட்

ஸ்ரீ ச்மிமெண்ட் லிமிட்டட் பங்குகளை 18,375 முதல் 18,190 ரூபாய்க்குள் இருக்கும் போது வாங்கலாம் என்றும் டார்கெட் 18,990 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 17,880 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

வேதாந்தா

வேதாந்தா நிறுவனப் பங்குகளை 222 முதல் 224 ரூபாய்க்குள் வாங்கலாம் என்றும் டார்கெட் 232 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ்ச் 2017 ரூபாய் என்றும் வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவன பங்குகளை 1381 முதல் 1392 ரூபாய்க்குள் இருக்கும் போது விற்கலாம் என்றும் டார்கெட் 1,350 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 1,408 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளனர்.

டைட்டன் கம்பெனி லிமிட்டட்

டைட்டன் கம்பெனி லிமிட்டட் பங்குகளை 888 முதல் 896 ரூபாய்க்குள் இருக்கும் போது விற்கலாம் என்றும் டார்கெட் 870 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 905 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

குறிப்பு

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.

Have a great day!
Read more...

English Summary

Stocks Recommendation For 27th to 31st August, 2018