அடுத்த வாரம் மே 28 முதல் ஜூன் 1 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் & விற்கலாம்..!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முதலீட்டாளர்களைப் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்ய வழி வகுத்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை சந்தை முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 261.6 புள்ளிகள் என 0.76% உயர்ந்து 34,924.87 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 91.30 புள்ளிகள் என 0.87 சதவீதம் உயர்ந்து 10,605.15 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

எனவே வரும் வாரம் எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற வல்லுநர்களின் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.

ஐடிசி லிமிடெட்

சிகிரெட் விற்பனை மட்டும் இல்லாமல் எப்எம்சிஜி பொருட்கள் வணிகத்திலும் அதிகக் கவனம் செலுத்தி வரும் ஐடிசி லிமிடெட் நிறுவனப் பங்குகளை 270 முதல் 273 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 287 ரூபாய் உயரும் என வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எச்டிஎப்சி வங்கி

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி வங்கி பங்குகளை 1,995 முதல் 2,012 ரூபாய் கொடுத்து வாங்கினால் 2,074 ரூபாய் வரை உயரும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ்

அலுமினியம் உற்பத்தி செய்யும் ஹிண்டல்கோ நிறுவனப் பங்குகளை 243 முதல் 246 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 260 ரூபாய் வரை உயரும் எனப் பரிந்துரைத்துள்ளனர்.

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளை 1,132 முதல் 1,141 ரூபாய் வரை கொடுத்த வாங்கினால் 1,208 ரூபாய் வரை உயரும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எல்ஐசி ஹவுசிங் ஃபினான்ஸ்

வீட்டுக் கடன் அளிக்கும் எல்ஐசி ஹவுசிங் ஃபினான்ஸ் பங்குகளை 480 முதல் 484 ரூபாய் வரை அளித்து வாங்கினால் 512 ரூபாய் வரை உயரும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறிப்பு

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.

Have a great day!
Read more...

English Summary

Stocks Recommendation For 28th May to 1st June, 2018