அடுத்த வாரம் ஜூலை 2 முதல் 6 வரை எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்..!

ஜூலை மாதத்திற்கான ஆர்டர்கள் துவங்கிய நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்ததால் இந்திய பங்கு சந்தை வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை உயர்வுடன் முடிந்தது.

பங்கு சந்தை முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 385.84 புள்ளிகள் என 1.10 சதவீதம் உயர்ந்து 35,423.48 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 125.20 புள்ளிகள் என 1.18 சதவீதம் உயர்ந்து 10,714.30 ரூபாய் ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. எனவே வரும் வாரம் எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற வல்லுநர்களின் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை பங்குகளை 1038 முதல் 1047 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 1,105 ரூபாய் வரை லாபம் பெறலாம் என்றும் ஸ்டாப் லாஸ் 996 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனப் பங்குகளை 561 முதல் 566 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 594 ரூபாய் வரை உயரும் என்றும் ஸ்டாப் லாஸ் 545 ரூபாய் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அல்ட்ரா டெக் சிமெண்ட்

அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனப் பங்குகளை 3,796 முதல் 3816 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 4,000 ரூபாய் வரை உயரும் என்றும் ஸ்டாப் லாஸ் 3670 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஹீரோ மோட்டோ கார்ப்

ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகளை 3,270 ரூபாய் என்று இருக்கும் போது விற்கலாம் என்றும் ஸ்டாப் லாஸ் 3530 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் லிமிடட்

கேப்பிட்டல் ஃபர்ஸ்ட் நிறுவனப் பங்குகளை விற்கலாம் என்றும் ஸ்டாப் லாஸ் 542 ரூபாய் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பு

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.

Have a great day!
Read more...

English Summary

Stocks Recommendation For 2nd July to 6th July, 2018