இந்த வாரம் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்!

சந்தை வெள்ளிக்கிழமை முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 352.21 புள்ளிகள் என 0.95 சதவீதம் உயர்ந்து 37,336.85 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 111.05 புள்ளிகள் என 0.99 சதவீதம் உயர்ந்து 11,278.35 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

திங்கட்கிழமை காலை 9:20 மணியளவில் பங்கு சந்தை துவங்கிய சில நிமிடங்களில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 107.46 புள்ளிகள் என 0.27 சதவீதம் உயர்ந்தும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 10.90 புள்ளிகள் என 0.10 சதவீதம் உயர்ந்து 11,289.95 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

எனவே இந்த வாரம் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம் என்ற வல்லுநர்களின் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.

இண்டஸ்இண்ட் வங்கி

இண்டஸ்இண்ட் பங்குகளை 1964 முதல் 1982 ரூபாய்க்குள் இருக்கும் போது வாங்கலாம் என்றும், டார்கெட் 2,086 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 1907 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ்

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை 632 முதல் 638 ரூபாய் வரை இருக்கும் போது வாங்கலாம் என்றும் டார்கெட் 676 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 608 ரூபாய் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

செஸ்க் லிமிட்டட்

செஸ்க் லிமிட்டட் பங்குகளை 944 முதல் 952 ரூபாய்க்குள் இருக்கும் போது வாங்கலாம் என்றும் டார்கெட் 1005 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 908 ரூபாய் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மைண்ட்டிரீ

மைண்ட்டிரீ பங்குகளை 943 முதல் 951 ரூபாய்க்குள் இருக்கும் போது விற்கலாம் என்றும் டார்கெட் 890 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 985 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மாருதி சுசூகி

மாருதி சுசூகி பங்குகளை 9296 முதல் 9360 ரூபாய்க்குள் இருக்கும் போது விற்கலாம் என்றும் டார்கெட் 8770 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 9690 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறிப்பு

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.

Have a great day!
Read more...

English Summary

Stocks Recommendation For 30th July to 3rd August, 2018