டாடா குழுமம் இந்தியாவில் ஐடி, வாகன விற்பனை என பல தொழில்களிலும் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளது. எனவே டாடா குழும பங்கில் தைரியமாக முதலீடு செய்யலாம் என முதலீட்டு நிபுணர்கள் கூறுவது உண்டு. அந்த வகையில் டாடா குழுமத்தை சேர்ந்த ஒரு மல்டிபேக்கர் பங்கு குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

டாடா குழுமத்தின் முன்னணி நிறுவனமான டாடா பவர் , நடப்பு 7 நிதியாண்டின் முதல் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி டாடா பவர் நிறுவனம் தனது ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் கடந்த ஆண்டை விட 11% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மொத்தமாக முதல் காலாண்டில் இந்த நிறுவனம் 1,401 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. தொடர்ந்து 27 காலாண்டுகளாக இந்நிறுவனம் லாபத்தில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Advertisement

டாடா பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் 8% உயர்ந்து 18,898 கோடி ரூபாயாக உள்ளது. இதுவும் கடந்த ஆண்டை விட அதிகம். அதே வேளையில் இந்த ஒரே காலாண்டில் இதுவரை இல்லாத அளவாக 5,375 கோடி ரூபாயை இந்த நிறுவனம் முதலீடாக மேற்கொண்டுள்ளது. எனவே தீர்க்கமான எதிர்கால திட்டங்களை இது கொண்டுள்ளது.

திரைப்படங்களை விடுங்க.. தனுஷுக்கு இப்படி ஒரு பிஸ்னஸ் இருக்கு தெரியுமா?

இந்நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை 15% லாப வளர்ச்சியை பதிவு செய்து 612 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. குறிப்பாக, சோலார் செல் மற்றும் மாட்யூல் உற்பத்தி பிரிவு கடந்த ஆண்டை விட 3.9 மடங்கு அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. ரூஃப்டாப் சோலார் பிரிவு 1.7 மடங்கு லாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மின் விநியோகம் துறை 11% லாப வளர்ச்சியை எட்டியுள்ளது.

Advertisement

இந்நிலையில் தான் இந்நிறுவனம் தனது நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும், எதிர்கால விரிவாக்க பணிகளை மேற்கொள்ளவும், 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை (Non-Convertible Debentures - NCD) வெளியிட இருப்பதாக கூறியுள்ளது. இப்படி சாதகமான தகவல்கள் வெளியான போதிலும் இந்திய பங்குச்சந்தையின் இன்றைய சரிவால் டாடா பவர் பங்கு மதிப்பு சரிந்தது.

பரந்தூர் ஏர்போர்ட் கைவிட்டு போனாலும் மெட்ரோ ரயில் கைகொடுக்கும்..!! CMRL சொன்ன குட்நியூஸ்..!!

இன்று டாடா பவர் ஒரு பங்கு மதிப்பு 369 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதன் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 464 ரூபாயாகும். இந்த நிறுவனத்தில் 46% பங்குகள் பிரமோட்டர்கள் வசம் உள்ளது. 10% பங்குகள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசம் உள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் 29% பங்குகளை வைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்த பங்கு மதிப்பு 200%க்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் சுமார் 6% உயர்ந்துள்ளது.

Advertisement

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.