2018-ம் ஆண்டு எஸ்ஐபி கீழ் முதலீடு செய்ய ஏற்ற 5 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களுக்குக் குறைந்த ரிஸ்க் உடன் நீண்ட காலம் முதலீடு செய்ய லாபம் பார்க்க ஏற்ற முறையாக எஸ்ஐபி உள்ளது. எனவே 2018-ம் ஆண்டு எஸ்ஐபி வாயிலாக முதலீடு செய்ய ஏற்ற 5 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை இங்குத் தொகுத்து வழங்க உள்ளோம்.

எஸ்ஐபி என்பது ஒவ்வொரு மாதமும் தவனை முறையில் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யக் கூடிய ஒரு திட்டமாகும். கடந்த சில ஆண்டுகளாக ரீடெய்ல் முதலீட்டாளர்கள் அதிகளவில் எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்து லாபங்களைப் பார்த்து வருகின்றனர்.

எஸ்பிஐ ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப்

2009-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்தத் திட்டமானது அதிகபட்சமாக 23.93 சதவீத லாபத்தினை அளித்துள்ளது. மிட்கே பங்குகளிலும் முதலீடு செய்வதால் மிதமான அதிக ரிஸ்க் வாய்ந்ததாக இந்தத் திட்டம் உள்ளது. வெஸ்ட் லைப் டெவலப்மெண்ட், கிர்லோஸ்கர் ஆயில் எஞ்சின்கள், எல்டி ஃபுட்ஸ், ரிலாக்ஸ் ஃபோர்டு, எல்ஜி உபகரணங்கள் மற்றும் பல முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

டிஎஸ்பி பிளாக்டாக் மைக்ரோ கேப் ஃபண்டு ரெகுலர் பிளான்

2007-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்தத் திட்டமானது 19.61 சதவித லாபத்தினை இதுவரை அளித்துள்ளது. மிட்கேப் மற்றும் ஸ்மால் கே பங்குகளில் முதலீடு செய்வதால் மிதமான ரிஸ்க் உடையது. பினோலெக்ஸ் கேபிள்கள், ஏபிஎல் அப்பல்லோ டூப்ஸ், அதுல், ஈவேரிட் இண்டஸ்ட்ரீஸ் (ஐ), எஸ்ஆர்எஃப், ஆர்டி இன்டஸ்ட்ரீஸ், கே.பி.ஆர் மில்ஸ் மற்றும் பல முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர் ஃபண்டு

இந்த ஃபண்டில் முதலீடு செய்யும் போது மூன்று வருடத்திற்கு லாக் இன் பீரியட் உள்ளது, ஆனால் 2005-ம் ஆண்டுத் துவங்கியதில் இருந்து ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 16.47 சதவீதம் வரை லாபத்தினை அளித்டு வருகிறது. இந்தத் திட்டமும் மிதமான ரிஸ்க்கை கொண்டது ஆகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டி.வி.எஸ். மோட்டார், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஏபிபி, இன்ஃபோசிஸ், ஹனிவெல் ஆட்டோமேஷன் மற்றும் இதர நிறுவனங்களில் இந்த ஃபண்டு முதலீடு செய்துள்ளது.

ஐசிஐசிஐ புரடன்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்டு

2004-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 21.96 சதவீத லாபத்தினை அளித்து வந்துள்ளது. மிதமான அதிக ரிஸ் கொண்ட ஃபண்டு திட்டமாக இது உள்ளது. சன் பார்மா, எல் அண்ட் டி, விப்ரோ, ஹெச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ், என்டிபிசி, எம் & எம், எஸ்.பி.ஐ, ஐடிசி மற்றும் பல முக்கிய நிறுவனங்களில் ஐசிஐசிஐ புரடன்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்டு முதலீடு செய்துள்ளது.

எச்டிஎப்சி புரூடென்ஸ் ஃபண்டு

1994-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட எச்டிஎப்சி புரூடென்ஸ் ஃபண்டு ஒவ்வொரு ஆண்டுச் சராசரியாக 19.28 சதவீத லாபத்தினை அளித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஃபண்டு நிறுவனம் நிலையான லாபத்தினை அளித்து வருகிறது. மிதமான அதிக ரிஸ்க் உள்ள இந்த ஃபண்டு நிறுவனம் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி, என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், கெயில், ஆக்சிஸ் வங்கி மற்றும் பல முக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

முதலீடு குறித்த உரிமைத்துறப்பு

கிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.

Have a great day!
Read more...

English Summary

Top 5 Mutual Funds for SIP in India for 2018