துருக்கி நிதி நெருக்கடியால் சரிவடைந்த இந்திய பங்கு சந்தை..!

துருக்கியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் தாக்கம் இந்திய பங்கு சந்தை மீதும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத விதமாக 69.62 ரூபாயாகச் சரிந்து காணப்பட்டது.

சர்வதேச சந்தியில் ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகள் 1 வருட சரிவினை சந்தித்துள்ளன. சில்லறை பணவீக்கம் அதிகமாக வாய்ப்புள்ளதும் பங்கு சந்தை சரிவிற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சந்தை நிலவரம்

இந்திய பங்கு சந்தை முடிவில் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 224.33 புள்ளிகள் என 0.59 சதவீதம் சரிந்து 37,644.90 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 73.75 புள்ளிகள் என 0.65 சதவீதம் சரிந்து 11,355.75 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

துறை வாரியான நிலவரம்

எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, நிதி, எனர்ஜி மற்றும் அடிப்படை பொருட்கள் துறை பங்குகள் நட்டம் அடைந்த அதே நேரம் ஐடி, டெக், ஹெல்த்கேர், எப்எம்சிஜி மற்றும் நுகர்வோர் சாதனங்கள் போன்ற துறை பங்குகள் லாபம் அளித்துள்ளன.

லாபம் அளித்த நிறுவனங்கள்

இன்போசிஸ், சன் பார்மா, விப்ரோ, மஹிந்தரா & மஹிந்தரா, கோல் இந்தியா, இண்டஸ் இண்ட் வங்கி பங்குகள் லாபம் அளித்துள்ளன.

நட்டம் அளித்த பங்குகள்

வேதாந்தா, எஸ்பிஐ, யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி பங்குகள் நட்டம் அடைந்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Turkish lira Made Sensex down 224 points, Nifty settles at 11,355