இந்திய பங்குச்சந்தையில் முன்னணி முதலீட்டாளராக அறியப்படுபவர் விஜய் கேடியா. இவர் சரியான நிறுவனத்தை தேர்வு செய்து முதலீடு செய்வதில் வல்லவர். அந்த வகையில் பெரும்பாலான சில்லறை முதலீட்டாளர்கள் கேடியா முதலீடு செய்யும் நிறுவனங்களை தேடி தேடி முதலீடு செய்வார்கள். அந்த வகையில் விஜய் கேடியா மற்றும் அவரது குடும்பத்தினர், 1700% லாபத்தை தந்த ஒரு மல்டிபேக்கர் பங்கில் முதலீடு செய்துள்ளனர்.
நீர் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு நிறுவனமான 'SPML infra' தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், கடன் சுமையை குறைக்கவும் புதிய பங்கு வெளியீடு மூலம் 190 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, விஜய் கேடியாவின் மனைவி மஞ்சு கேடியா, 13,45,000 Convertible Warrant-களை வாங்கியுள்ளார். ஏற்கனவே, விஜய் கேடியா தனது நிறுவனமான கேடியா செக்யூரிட்டீஸ் மூலம் கடந்த ஜனவரி 2026-ல் 14,98,107 பங்குகளை வாங்கியிருந்தார்.
தற்போது அவரது மனைவி மஞ்சு கேடியா வாங்கிய பங்குகள் மூலம், இவர்களது மொத்த பங்குகள் 28,43,107 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இந்த நிறுவனத்தில் இவர்களது பங்கு சுமார் 3 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. செபி விதிமுறைகளின்படி, இந்த வாரண்டுகள் 18 மாதங்களுக்குள் சாதாரண பங்குகளாக மாற்றப்படும்.
விஜய்-இன் ஜனநாயகன் ரிலீஸில் இருக்கும் ரூ.200 கோடி சிக்கல்..!! இது புது கணக்கா இருக்கே?
அதே போல நேஷனல் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ,7.16 கோடி கடனுக்கு பதில் 3,84,858 பங்குகளை வாங்கி கொண்டுள்ளது. இது நிறுவனத்தின் நிதி நிலையை வலுப்படுத்த உதவும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.எனவே தான் முதலீட்டாளர்கள் போட்டி போட்டு இந்த பங்கினை வாங்குகிறார்கள்.
SPML இன்ஃப்ரா ஒரு மல்டிபேக்கர் பங்காக கருதப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த பங்கின் மதிப்பு சுமார் 1,734% உயர்வு கண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில 385%க்கும் மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 3% மற்றும் ஆறு மாதங்களில் 12% வளர்ச்சியை கண்டுள்ளது.
18 கேரட் தங்கத்தை அடகு வைத்து நகை கடன் வாங்க முடியுமா? விரிவான வழிகாட்டி..!!
இந்த நிறுவனம் 190 கோடி ரூபாயை திரட்டும் செய்தியை அறிவித்த நிலையில், பங்குச்சந்தையில் 203.80 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது. 2021இல் வெறும் 14 ரூபாயாக இருந்த இந்த பங்கு தற்போது 203 ரூபாயாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் 46% பங்குகளையும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 15.54% பங்குகளையும் கொண்டுள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More Articles
- பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கவலையில்லை..!! 28% லாபம் தரப்போகும் மல்டிபேக்கர் பங்கு..!!
- ரூ.1 லட்சம் முதலீடு.. இன்னைக்கு ரூ.1.8 கோடி!! 3,900% லாபம் கொடுத்த டிஃபென்ஸ் ஸ்டாக்
- 3 மாதங்களில் 51% லாபம் தந்த மல்டிபேக்கர் பங்கு: உங்க போர்ட்போலியோவில் இருக்கா?
- பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்திலும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தந்த மல்டிபேக்கர் பங்கு!!
- 3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?
- 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?