இந்திய வம்சாவளி சிறுவன் ஜெய்நம் ஜெயின் குறித்து தான் துபாயே பேசி கொண்டிருக்கிறது. 14 வயதிலேயே பூர்ஜ் கலிஃபாவில் சொந்தமாக ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் இந்த சிறுவன்.

Advertisement

இந்தியாவின் புனேவை பூர்வீகமாகக் கொண்ட ஜெய்நம்முக்கு 5 வயதாகும் போது பெற்றோர் துபாய்க்கு குடிபெயர்ந்தனர். சிறுவயதிலிருந்தே புத்தகங்கள் வாசிப்பதிலும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் கொண்டிருந்த ஜெய்நம்முக்கு யூடியூப் மற்றும் ஏஐ வரப்பிரசாதமாக அமைந்தன. தன்னுடைய 7ஆவது வயதில், தனது சகோதரியுடன் இணைந்து 'JJFuntime' என்ற யுடியூப் சேனலைத் தொடங்கினார்.

Advertisement

ஆரம்பத்தில் பொம்மைகளை அன்-பாக்ஸிங் (toy-unboxing) செய்யும் வீடியோக்களைப் பதிவேற்றி வந்த இவர், பிறகு அறிவியல் சோதனைகள் மற்றும் கல்வி சார்ந்த விஷயங்களை கற்று கொடுக்க தொடங்கினார். இந்த சேனல் அவருக்கு பொது மேடைகளில் பேசும் திறனையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது. கேம்பிரிட்ஜ் கல்வி முறையின் கீழ், தனது 13ஆவது வயதிலேயே 10-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்தாராம்.

இதனை அடுத்து ஏஐ பிரிவில் ஆர்வம் காட்டிய ஜெய்நம் மெங்கோ இன்ஜின் என்ற ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வணிகங்கள் தங்களது மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் விற்பனை போன்ற பணிகளை தானியங்கி முறையில் எளிதாக்க இந்த ஏஐ மென்பொருள் உதவுகிறது. துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டடத்தின் 141-வது தளத்தில் இதற்கான அலுவலகத்தை ஜெய்நம் அமைத்துள்ளார்.

Advertisement

தனது 10 வயதிலிருந்து, 50 நாட்களில் 50 புத்தகங்கள் படிப்பது அல்லது 50 நெட்வொர்க்கிங் நிகழ்வுகளில் கலந்துகொள்வது போன்ற "50-நாள் சவால்களை" தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டு அதை சிறப்பாக முடித்தாராம் ஜெய்நம். இணையதளங்கள் மற்றும் யுடியூப் மூலம் சுயமாகவே ஏஐ நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, அதை வைத்து புதிய மென்பொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். டெட் எக்ஸ் பேச்சாளாராகவும் திகழ்கிறார்.

வயது என்பது ஒரு எண் மட்டுமே; லட்சியத்திற்கு அது தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு 'யூனிகார்ன்' நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதே தனது கனவு என அவர் கூறுகிறார். 14 வயதில் பெரும்பாலானவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் கற்று கொண்டிருக்கும் நிலையில் அந்த பாடத்திலேயே இடம் பெறும் அளவுக்கு சாதனை படைத்து இந்த சிறுவன் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

Advertisement

விடாமுயற்சி மற்றும் புதிய விஷயங்களை முயற்சிக்கும் துணிச்சல் இருந்தால், சிகரங்களைத் தொட முடியும் என்பதற்கு ஜெய்நம் ஜெயின் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். ஏஐ, யூடியூப் போன்றவற்றை சிலர் தவறாக பயன்படுத்தும் நிலையில் அதனை சரியாக பயன்படுத்தினால் சிறந்த வெற்றியை பெற முடியும் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார். தன்னை போன்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வழிகாட்டியாகவும் மாறி இருக்கும் ஜெய்நம் தொடர்ச்சியாக எப்படி திறனை மேம்படுத்துவது என சமூகவலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.