விமான டிக்கெட்டுக்கான தொகையை இனி ஈஎம்ஐ முறையில் செலுத்தலாம்.. ஜெட் ஏர்வேஸின் அட்டகாசமான திட்டம்..!

ரூபாய் நோட்டுகள் பற்றாக்குறையினால் மக்கள் தவித்து வரும் நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான பயணிகளுக்கு கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி தவனை முறையில் செல்லும் செவையை அறிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் அறிக்கை

மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஆக்ஸிஸ் வங்கி, எச்எஸ்பிஎஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடாக் மகேந்திரா வங்கி உட்பட சில வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஈஎம்ஐ மூலம் பணத்தை செலுத்தி விமான டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை

இந்திய அரசு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையைப் பிரபலப்படுத்தி வருகின்றது இதன் மூலம் டிஜிட்டல் பயனாளிகளுக்கு ஈஎம்ஐ மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவதினால் இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய டிஜிட்டல் மற்றும் நிதி புரட்சியை உருவாக்க இயலும்.

இந்தத் தவனை திட்டத்தின் மூலம் புதிய வாடிக்கையாளர்களைக் கவர இயலும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி ஜெயராஜ் சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

இந்திய கிரெடிட் கார்டுகள்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணையதளம் மற்றும் மொபைல் செயலி போன்றவற்றில் ஈஎம்ஐ என்ற தவனை முறையில் இந்தியாவில் வாங்கப்பட்ட ஆக்ஸிஸ் வங்கி, எச்எஸ்பிஎஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடாக் மகேந்திரா வங்கி, இண்டஸ்லேண்டு வங்கி, கோடாக் மகேந்திரா வங்கி மற்றும் ஸ்டேண்டர்ட் சார்டெட் வங்கிகளின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம்.

தவணைகள்

கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி தவனை முறையில் விமான டிக்கெட்களைப் பெறும் பொது 3, 6, 9 மற்றும் 12 மாத தவணைகளில் டிக்கெட் கட்டணங்களை சமன்படுத்தப்பட்ட தவனியில் செலுத்த முடியும்.

ஸ்மார்ட்போன், பிராட்பேண்டு மற்றும் வைஃபை அணுகல்கள் போன்ற வசதிகள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய வாடிக்கையாளர்கள் பலர் கிரெட்ட் கார்டுகளை பயன்படுத்தி தவனை முறையில் பொருட்களை வாங்குகின்றனர்.

 

மூன்றில் ஒரு பங்கு கிரெடிட் கார்டு வாடிக்கியாளர்கள்

ஆர்பிஐ தரவின் படி ஜெட் ஏர்வேஸ் இணைந்துள்ள இந்த ஆறு வங்கிகளிலும் சேர்த்து இந்தியாவில் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் மூன்றில் ஒரு பங்கு உள்ளதாகக் கூறப்படுகின்றது.

Read more about: jet airways emi payment tickets

Have a great day!
Read more...

English Summary

With people going through hardship across the country due to cash crunch in the wake of Government's demonetisation move, domestic carrier Jet Airways has offered its customers the facility of staggered payments for bookings its flights.