தோசை மாவு விற்பனையில் ரூ.60 கோடி வருமானம்.. அடேங்கப்பா..!

பொதுவாக அனைத்துத் தொழில்களும் அதில் செய்யப்படும் முதலீடுகளைப் பெருத்தே வெற்றி பெறும். ஒரு தொழில் முனைவோர் அவருடைய ஆரம்ப நாட்களில் தொழிலில் கவனம் செலுத்துவதை விட, அதற்கு உரிய முதலீடுகளுக்கு அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

நீங்கள் செய்யும் தொழில் மிகச் சரியாக அமைந்து விட்டால் எல்லாமே சுகம். அவ்வாறு இல்லையெனில் முதலீட்டுக்கு அலையும் அலைச்சலால், ஒரு புதிய தொழில்முனைவோருக்கு ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சல்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

அனைத்தையும் தாண்டி பிறருடைய உதவியின்றி, தன்னுடைய சொந்த முயற்சியால் வெற்றி பெற்ற ஒரு தொழில் முனைவோரைப் பற்றிய கட்டுரை இது. அவருடைய சரித்திரம் நாம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றது. இவர் பெயர் முஸ்தபா.. யார் இவர்..?

முஸ்தபா பிசி

கேரளாவில் உள்ள வயநாடுக்கு அருகே உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் இருந்து வந்தவரான முஸ்தபா பிசி, ஐடி (iD) என்கிற ஒரு புதுமையான உணவு நிறுவனத்தை நிறுவினார். இது வர்த்தகச் சந்தைக்குப் புதிதாக இருந்தாலும், பெரு நகரங்களில் இந்நிறுவனத்திற்குத் தற்போது கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் பெரியது.

முதலீடும் முயற்சியும்..

இந்த நிறுவனத்தை நிர்வகிக்க மற்றும் முன்னேற்ற அவர் யாரிடமும் எந்த விதமான நிதி உதவியும் பெறவில்லை. மாறாக முதல் ஆறு ஆண்டுகள் தன்னுடைய சொந்த முதலீட்டில் இந்த நிறுவனத்தை வழி நடத்தி அதை மிகவும் வெற்றிகரமான நிறுவனமாக மாற்றி இருக்கின்றார்.

2006 பெங்களுரூ

2006 ஆம் ஆண்டுப் பெங்களூரில் பரபரப்பு நிறைந்த ஒரு வணிக வீதியில் ஒரு சிறிய நிறுவனமாகத் தொடங்கிய ஐடி பிரெஷ் புட்ஸ் நிறுவனம், நீண்ட தூரம் பயணித்துப் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.

9 நகரங்களில் விரிவாக்கம்

இன்று இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 9 நகரங்களில் தன்னுடைய கிளைகளை நிறுவி முன்னிலையில் உள்ளது. இப்போது நாள் ஒன்றுக்கு சுமார் 50,000 பாக்கெட்டுகள் தோசை மற்றும் இட்லி மாவைத் தயாரித்து இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுமார் 15,000 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றது.

இட்லி மற்றும் தோடை மாவு வகைகளைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்களையும் இந்த நிறுவனம் தயாரித்து வருகின்றது.

 

60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

ஐடி உணவு உற்பத்தி நிறுவனம், தனக்கான முதலீடுகளை வெளியில் இருந்து பெறாமல் முதல் எட்டு ஆண்டுகளுக்கு மிகவும் லாபகரமாக இயங்கி வரும் நிலையில், தற்பொழுது இந்த நிறுவனம் சுமார் 60 கோடி ருபாய்க்கு வணிகத்தை மேற்கொண்டு வருகின்றது.

விரிவாக்கம்

இந்த நிறுவனத்தின் கிளைகளைப் பல்வேறு நகரங்களில் திறக்க முடிவு செய்த பின்னர், அதற்குத் தேவைப்படும் முதலீடுகளைப் பெற நாங்கள் வெளி முதலீட்டாளர்களின் உதவியைப் பெற முடிவு செய்தோம், எனத் திரு முஸ்தபா தெரிவிக்கின்றார்.

முக்கியத் தயாரிப்புகள்

தோசை மற்றும் இட்லி மாவு-ஐ தாண்டி சப்பாத்தி, கோதுமை பரோட்டா, மலபார் பரோட்டா, பரோட்டா ஜூனியர், மினி பரோட்டா, பன்னீர், தயிர் ஆகியவற்றைத் தயாரித்து இந்தியாவின் 9 பெரு நகரங்களில் வர்த்தகம் செய்து வருகிறது.

இளைஞர்கள்

இந்நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்க்கே இளைஞர்கள் தான். இந்த வேகமான வாழ்க்கை முறையில் இளைஞர்களுக்கு உடனடி உணவு தேவை அதிகரித்துள்ள நிலையில் ஹோட்டல் பாஸ்ட் புட் கடைகளில் அதிகளவில் சாப்பிட்டு வரும் நிலையில், வீட்டிலேயே வேகமாகச் சமைத்து சாப்பிட இன்றைய இளைஞர்களுக்கு ஐடி பிரெஷ் புட்ஸ் சிறந்த சேர்வாக உள்ளது.

புதிய முயற்சி

சந்தையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாயிலாகவும், நம்பிக்கையை விதைக்கும் வகையில், முக்கிய நிறுவனங்கள், ஷாப்பிங் மால் போன்றவற்றி பெரிய பிரிட்ஜ் நிறைய ஐடி தயாரிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து நீங்கள் எதைவேண்டுமானாலும், எவ்வளவும் வேண்டுமானும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான பணத்தை வசூல் செய்ய ஏடிஎம் இயந்திரமோ, அல்லது பணியாளர்களோ இல்லை. நீங்கள் உங்கள் விருப்பத்தின் படி அதற்கான பணத்தை முழுமையாகவோ, பகுதி பகுதியாகவோ, எப்போது வேண்டுமானாலும் பரிட்ஜ்-இல் இருக்கும் பெட்டியில் நீங்கள் போடலாம்.

 

ஆரம்ப முதலீடு

இந்தத் தொழிலுக்குத் தேவைப்பட்ட ஆரம்பக் கால முதலீட்டை, திரு முஸ்தபா, தன்னுடைய சொத்துக்களை விற்பதன் மூலமும், தன்னுடைய முந்தைய பணியில் இருந்து விடுபடும் பொழுது கிடைத்த பணத்தை வைத்தும் சமாளித்தார்.

நம்பிக்கை

அவரை ஒத்த தொழில் முனைவோர் எல்லாம் தொழிலின் ஆரம்பக்கால முதலீடுகளைப் பற்றி அதிகம் கவலை அடைந்த பொழுது, திரு முஸ்தபா, இன்று வருமானம் தராத ஒரு தொழில், என்றுமே வருமானம் தராது என்று உறுதியாக நம்பினார்.

உறுதியாக நிற்க வேண்டும்..

"நான் ஒரு இலாபகரமான வணிகத்தின் மீது ஒரு வலுவான நம்பிக்கை வைத்திருப்பவன். நான் வணிகத்தின் மூலம் வரும் இலாபத்தைப் பற்றிப் பரப்புரையாற்றும் ஒரு பரப்புரையாளர்.

முதல் நாளில் இருந்தே நல்ல பணப்புழக்கம் மற்றும் லாபம் தரும் ஒரு நல்ல வணிக மாதிரியைப் பின்பற்ற நாம் உறுதியோடு இருக்க வேண்டும்.", என்று அவர் கூறுகிறார்.

 

முதலீடுகளை நிர்வகிக்கும் தந்திரங்கள்

"அது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை. எங்கள் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு மிகச் சிறிய முதலீடான ரூ 50,000 த்தில், 5000 க்கும் குறைவான சில அடிப்படை வசதிகளுடன் இந்த நிறுவனத்தை 50 சதுர அடி கொண்ட ஒரு சிறிய அறையில் தொடங்கினோம்.

இங்கே அடிப்படை வசதிகள் என்பது ஒரு டிவிஎஸ் ஸ்கூட்டி, கிரைண்டர் மற்றும் எடை போடும் இயந்திரம் மட்டும் தான். நாங்கள் சுமார் 9 மாதங்களில் எங்களுடைய இலக்கை அடைந்து விட்டோம், "என்று அவர் கூறினார்.

 

உண்மை மிகவும் அவசியம்

"என்னுடைய புரிதலின் படி, சந்தை மிகவும் உண்மையாக மற்றும் நேர்மையுடன் தொழில் புரிபவரையும், பொழுது போக்கிற்காக வணிகத்தைத் தொடர்பவர்களையும் மிகவும் எளிதில் இனம் கண்டு விடும்.

நீங்கள் உங்களுடைய வணிகத்திற்கு உண்மையாக இருந்தால், முதலீடு என்பது ஒரு தடையல்ல. இலாபகரமான நிறுவனமாக விளங்கியதால், இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தத் தேவைப்படும் முதலீடுகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் எழவில்லை." என முஸ்தபா கூறினார்.

 

செலவுகளைக் குறைக்கும் தந்திரம்

ஐடி உணவு உற்பத்தி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், இணைந்து பணியாற்றும் (Co-Working) தொழிற்கூடமான ஹைவ், வி ஆர் பெங்களூரூவில் உள்ளது.

இதன் மூலம் கணிசமான முதலீட்டைச் சேமிக்க முடிந்தது என முஸ்தபா கூறுகிறார். தொழில் முனைவோருக்கு ஒவ்வொரு பைசாவும் மிகவும் முக்கியம் என ஆணித்தனமாக நம்புகிறார்.

 

Have a great day!
Read more...

English Summary

iD Fresh Foods has come a long way to set this milestones