பிச்சைக்காரர்கள் முதல் பல பேரின் வாழக்கையை மாற்றிய பார்த்திபன்..!

சேலம்: இந்தியாவில் 120 கோடிகளுக்கும் அதிகமாக உள்ள மக்கள் தொகையில் பலர் தனியார் நிதி நிறுவனங்கள் அல்லது அடகு கடைகளின் மூலமாகத் தான் கடன் பெறுகின்றனர். அடகு கடையில் அதிக வட்டிக்குக் கடன் பெற்ற பிறகு இவர்கள் நீண்ட காலம் வட்டியும் அசலும் செலுத்த முடியாமல் தவிப்பதும் நடப்பது உண்டு.

இதை மற்ற நினைத்தார் ஒருவர், அவர் தான் பார்த்திபன், இவர் சேலம் மாவட்டத்தில் ஒரு வங்கி அதிகாரியாகப் பணி புரிந்து வருகிறார்.

வங்கி அமைப்பில் புரட்சி

என்னை நான் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தை அளிப்பது, சலான் சரிபார்ப்பது, கணக்கு போடுவது போன்றவற்றை மட்டும் செய்ய விரும்பவில்லை என்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் டெல்லியை 100-க்கும் மேற்பட்ட பிச்சை காரர்களை இவர் வங்கி கணக்கு துவங்க வைத்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

 

உணவு இடைவேளை

மதிய உணவு இடைவேளையில் தான் வெளியில் சென்ற உணவு எடுத்துக்கொள்வதாகவும், அது மட்டும் இல்லாமல் சிறந்து நேரம் இளைப்பாற நடப்பதாகவும், அப்போது தான் நிறையப் பழக்கடைகள், காய் கறி கடைகள், சிறு வியாபாரிகளைப் பார்த்ததாகவும் இவர்களில் பலர் நகர வாழ்க்கைக்குக் கிராமங்களில் இருந்து பல கனவுகளுடன் இடம் பெயர்ந்தவர்கள் அதில் முக்கியமான ஒன்று பணம் என்கிறார்.

வருமானமும் கடனும்

ஆனால் இவர்கள் எல்லாம் தனியார் கந்து வட்டி காரர்களிடம் அதிக வட்டிக்குக் கடன் பெற்று அவர்களிடம் சிக்கிக்கொண்டு இருப்பதைத் தான் பார்த்ததாகவும், இவர்கள் எவ்வளவு சம்பாதிப்பார்கள், அதில் எவ்வளவு வட்டி செலுத்துவார்கள், இவர்கள் பணத்தைச் சேமித்து வைக்கின்றார்களா என்பதை எல்லாம் ஆராய்ந்தேன்.

அப்போது தான் எனக்கு ஆச்சர்யமான ஒன்று தெரிய வந்தது ஒரு பிச்சைக்கார கூட ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றார். இதில் பெரும்பாலான 500 ரூபாய் தனியார் கடன் வழங்குபவர்களும் செல்கின்றது.

 

சேமிக்க ஆலோசனை

தனியார் கடன் வழங்குநர்கள் இவர்களிடம் இருந்து பணத்தைத் தினமும் தவனை முறையில் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள். அதனால் இவர்களுடன் நிதானமாக ஏன் நீங்கள் வங்கி கணக்கு திறக்கக் கூடாது என்றும், அதில் சேமித்து இவர்கள் கடனை திருப்பி அளிக்கலாம் அதே நேரம் சேமிக்கவும் முடியும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வங்கி கணக்கு

மேலும் நிறைய நபர்களை வங்கி கணக்கு திறக்க வைக்க வேண்டும் என்பதற்காக டீ குடிக்க வேண்டும் என்றாலும் ஒருவரிடம் மட்டும் டீ வாங்குவது, காய் கறிகள் என அனைத்தையும் குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து மட்டும் தொடர்ந்து வங்க துவங்கினேன். அப்படியே அவர்களிடம் நட்பை வளர்த்துக்கொண்டு எனது வங்கி கிளையைப் பற்றி அவர்களுக்குக் கூறுவேன். ஆனால் அவர்களுக்க நான் அந்த வங்கியின் அதிகாரி என்று கூறியதில்லை.

முதலில் தான் கூறிய இரண்டு மூன்று நாட்களுக்கு யாரும் வங்கிக்கு வரவில்லை பின்னர் ஒரு நாள் 5 நபர்கள் ஒரே நரத்தில் வந்தனர். அவர்கள் நேரடியாக வங்கி அலுவலர்களுடன் கணக்கு துவங்குவது பற்றி விசாரித்து விவரங்களைக் கேட்டு அறிந்து வங்கி கணக்கை திறந்தனர். இவர்கள் வங்கிக்கு வருவதற்கு முன்பே நான் வங்கி அலுவலர்களுக்கு இப்படிச் சிலர் வருவார்கள் அவர்களுக்கு உதவுமாறு கூறியிருந்தேன்.

அதற்குப் பிறகு நான் அந்த நபர்களை மீண்டும் சந்திக்கும் போது அவர்களுடைய நண்பர்கள் மற்றும் பக்கத்து கடைக்காரர்களும் எங்களுக்கு வங்கி கணக்கு வேண்டும் என்று கூறியுள்ளனர். இப்படியே 300 வங்கி கணக்கை திறக்க வைத்துள்ளார். இப்படியே சென்று கொண்டு இருக்கும் போது தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து இவர்கள் பெற்ற கடனைச் செலுத்திவிட்டு வங்கியில் பணத்தைச் சேமிக்கத் துவங்கினர். கடன் பெற்று அதையும் முறையாகத் திருப்பிச் செலுத்தி வந்தனர், இப்போது சேமித்தும் வருகின்றனர் என்கிறார் பார்த்திபன்.

 

சேமித்து வாழப் பழகுங்கள்

நான் அவர்களுக்கு எப்போதும் பணத்தைச் சேமித்து அதில் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்பதைக் கூறுவேன் அதனால் அவர்களால் சுய மரியாதையுடன் வாழ முடியும்.

பல கிராமங்கள் பொதுத் துறை போக்குவரத்து போன்ற வசதிகள் எல்லாம் இல்லாமல் இருந்தது, எனவே அவர்கள் வங்கிய தேடி வருவதை விட நானே அவர்களைத் தேடிச் சென்றேன் என்றும் வங்கியை அவர்கள் வீட்டிற்குத் தான் கொண்டு சென்றதாகவும் பார்த்திபன் கூறுகின்றார்.

 

ஆடு வியாபாரி சென்றாயன்

பள்ளிப் படிப்பை முடித்த சென்றாயன் என்பவர் ஆடு வளர்க்க 25,000 கடன் வேண்டும் என்று இருந்துள்ளார். அவரிடம் ஏற்கனவே சில ஆடுகளும் இருந்தன.

இவருக்கு அந்தக் கடனை சென்றாயனுக்குப் பெற்றுத் தந்ததால் நல்ல வருமானம் பெற்றதாகவும், அதை வைத்து தங்களது குழந்தைகளைப் படிக்க வைத்து ஆசிரியர் ஆக்க விரும்புவதாகவும் சென்றாயன் கூறுகின்றார்.

 

தனது கடமை என்ன?

என்னைப் பொருத்த வரை வங்கி அதிகாரியாகப் பணத்தை மட்டும் கையாளுவது இல்லை, அது மக்களுடன் நாம் கையளவது என்றும் அவர்களது லட்சியங்களைக் கையளவது என்கிறார் பார்த்திபன்.

தேடி அறிந்து கடன் அளிப்பவர்

அதுமட்டும் இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தைத் தரம் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று மாற்றுச் சிந்தனைகளுடன் இருப்பவர்களைத் தேடி கண்டறிந்து அவர்களைச் சந்தித்துப் பயனாளி என்ன செய்ய விரும்புகின்றார் என்பதைக் கேட்டறிந்து அவர்களுடைய சுற்று வட்டாரத்தில் இல்லாத ஒரு வணிகத்தைச் செய்ய விரும்பினால் அதை மேலும் ஊக்குவிக்கவும் செய்கிறார்.

இதில் மாற்றுத் திறனாளிகளையும் இவர் சந்தித்து அவர்களையும் ஒரு குழுவாக உருவாக்கி அவர்களுக்கும் கடனை பெற்றுத் தந்து வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள உதவியுள்ளார்.

 

பல வணிகர்களை உருவாக்கிய பங்கு இவருக்கு உண்டு

சிமண்ட் பையில் உள்ள நாரைப் பிரித்து எடுத்து அதன் மூலம் கயிறு தயாரிக்கும் சரோஜாவிற்கு இவர் கடன் பெற்றுத் தந்துள்ளார். சரோஜா இவர் மூலமாகக் கடன் பெற்றும் அதிகக் கயிறுகளை உற்பத்தி செய்து கடைகள் மட்டும் இல்லாமல் சந்தைகளிலும் சென்று கயிற்றை விற்றுக் கடனை திருப்பிச் செலுத்தியுள்ளார்.

பின்னர் முதல் முறையாகக் கடன் பெற்றதை முழுமையாகச் செலுத்திவிட்டு இரண்டாவது முறையாகக் கடனை பெற்று அதனையும் முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளார். பின்னர் மகளிர் குழுக்கள் வாயிலாக இப்போது கடன் ஏதும் இல்லாமல் தனது வணிகத்தைச் செய்து வருகின்றார்.

 

கனவு

அனைவருக்கும் நல்ல எதிர்காலம் வேண்டும் அமைய வேண்டும் என்பது அவர்களது கனவு. ஒரு வீடு, உடுத்த உடை, நல்ல உணவு வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சிலருக்கு இது ஏதும் கிடைத்து இருக்காது, இது அவர்கள் சுற்றுச்சூழலை பொறுத்தது ஆகும்.

இவர்கள் மிகவும் எளிமையாகவும், தங்களுக்குத் தேவையானது கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் என்றார்.

 

குழு கடன் அளிப்பதே தன் விருப்பம்

தான் அதிகம் குழுவாகக் கடன் பெறுவதை ஆதரிப்பதாகவும், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவர்கள் இன்று தங்கள் வாழ்க்கையான திட்டம் வெற்றிபெற்றதைக் கொண்டு மகிழ்கிறார்கள் என்று மொத்த கிராமும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்றும் கூறினார்.

உலகப் பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சி

ஒவ்வொரு தனிநபர்களின் வளர்ச்சி எப்படி முக்கியமோ அதே போன்று கிராமங்களின் வளர்ச்சியும் முக்கியம். இவர்களிடம் நாம் உலகப் பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சி என அனைத்தைப் பற்றியும் பேசலாம், நாம் இவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தால் இந்தியாவின் வரலாற்றையே மாற்றி அமைக்கலாம்..!

Read more about: bank manager beggars delhi
Have a great day!
Read more...

English Summary

This Bank Manager Made Beggars In Delhi Open Bank Accounts. And Changed Lives Of Villagers In Tamil Nadu.