விமானம், அடம்பர கார் என நாடு முழுவதும் பறந்து சென்று வர்த்தகம் செய்யும் கல்யாணராமன் பற்றி தெரியுமா?

திருவனந்தபுரம்: விரைவில் கேரளாவைச் சேர்ந்த கல்யாண் குழுமம் பங்குச் சந்தையில் நுழைய இருக்கின்றது. இப்படிப் பட்ட சூழலில் ஆங்கில வணிக இதழுக்கு கல்யாணராமன் அளித்த பேட்டியின் சுருக்கத்தை நாம் இங்குப் பார்ப்போம்.

டிஎஸ் கல்யாணராமன் அவர்களால் 1993-ம் ஆண்டு இந்த நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த பிஈ நிறுவனம் வார்பர்க் பிங்கஸ் கல்யாண் ஜூவல்லர்ஸில் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பக்கால இடையூறு

1993-ம் ஆண்டு முதன் முதலில் கேரளாவில் கடையைத் துவங்கிய கல்யாணராமன் தங்கத்தின் தூய்மையை எப்படிக் கண்டறிவது என்று அம்பலப்படுத்திப் போட்டி நிறுவனங்களுக்கு இடையூற்றை ஏற்ப்படுத்தினார்.

வர்த்தகத்தை அழிக்கும் முயற்சி

பின்னர்த் தனது நகை கடைகளில் உள்ள தங்க நகைகளில் விலை ஸ்டிக்கரை வைத்து வியாபாரம் செய்யத் துவங்கினார். இதைப் பார்த்த போட்டி நிறுவனங்கள் இவர் நகை கடைகளில் வர்த்தகத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவாதாகக் குற்றம் சாட்டினார்கள்.

துவக்கம்

கல்யாணராமன் வணிகத்தைத் தனது 12 வயது முதல் இருந்து கற்க துவங்கினார் என்று கூறலாம். 1906-ம் ஆண்டுக் கேரளாவில் உள்ள திருச்சூரில் தனது தந்தை துவக்கிய ஜவுளிக் கடையில் சிறு வேலைகளைச் செய்வதன் மூலம் வணிகத்தைக் கற்றார்.

படிப்பு மற்றும் நகை கடை துவக்கம்

ஸ்ரீ கேரளா வர்மா கல்லூரியில் காமர்ஸ் படிப்பை முடித்த கல்யாண ராமன் தங்களது ஜவுளி கடையை முதலில் நிர்வகிக்கத் துவங்கினார், அதே நேரம் 75 லட்சம் ரூபாய் முதலீடு செய்து நகை கடை ஒன்றைத் துவங்கினார்.

சரிவு என்று ஒன்று இல்லை

நகை கடையினை இவர் துவங்கிய பிறகு இவருக்குச் சரிவு என்ற ஒன்று இல்லை என்று கூறலாம். மேலும் இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம், கல்யாண் டெவலப்பர்ஸ் மூலமாக அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவது, வீடுகள் கட்டித் தருவது போன்ற வணிகங்களையும் துவங்கினார்.

இந்தியா முழுவதும் கிளை

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தங்களது கிளைகளை இந்தியா முழுவதும் நிறுவ 30 கோடி ரூபாய்களைச் செலவு செய்துள்ளது. இந்தியா மற்றும் மேற்கு ஆசியா நாடுகளில் கல்யாண் ஜூவல்லர்ஸ்க்கு மொத்தம் 105 ஷோரூம்கள் உள்ளன.

விளம்பரங்களுக்குத் திரை நடிகர்கள்

விளம்பரங்களுக்கு அந்த அந்த மாநிலங்கள் பிரபலங்களைத் தூதர்களாக நியமிக்கத் துவங்கினார். அதன் ஒரு முடிவு தான் இந்தியா அளவில் அமிதாப் பச்சன் விளம்பர தூதர் ஆனார், தமிழ்நாட்டில் பிரபுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஐஷ்வர்யா ராய்

தேசிய அளவில் விளம்பர தூதராக ஐஷ்வர்யா ராயினை நியமிக்க வருடத்திற்கு 100 மில்லியன் டாலர் அளித்து இரண்டு வருடங்களுக்குப் புக் செய்தார். பின்னர் 2016-ம் ஆண்டு ஐஷ்வர்யா ராய்க்கு பதிலாகச் சோனம் கபூர் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.

சொந்த விமானம்

கேரளாவில் இருந்து முதன் முதலாகத் தனியார் விமானத்திற்குச் சொந்தக்காரர் ஆனவர் கல்யாணராமன் வர்கள் தான். 30 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு வருடத்திற்கு முன்பு தான் 7 நபர்கள் அமரக்கூடிய எம்பியர் பெனோம் 100 விமானத்தைத் துவங்கினார். இந்த விமானத்தின் மூலமாகத் தனது நிறுவனத்தின் கிளைகள் உள்ள நகரத்திற்கு எளிதாக இவர் சென்று வருகிறார்.

இந்தியாவும் தங்கமும்

உலகச் சந்தையில் இந்தியா 30 சதவீதம் தங்க சந்தையைத் தன் வசம் வைத்துள்ளது. அதிலும் குறிப்பிடும் படியாகத் தென் இந்தியாவில் மட்டும் 45 சதவீத சந்தை மதிப்பில் தங்கம் வர்த்தகம் செய்யப்படுகின்றது.

தென் இந்திய மாநிலங்களில் தங்கம் விற்பனை

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிக அளவில் தங்க நகைகள் வாங்குவதாகவும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் அதிகம் விரும்புவதாக அன்மையில் வெளிவந்த ஆய்வு அறிக்கை கூறுகின்றது.

பங்குச் சந்தையில்

விரைவில் கல்யாண் குழுமம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட இருக்கின்றது.

வெளிநாட்டு முதலீடுகள்

வார்பர்க் பிங்கஸ் நிறுவனத்தின் ஈக்விட்டி பிரிவு சமீபத்தில் 500 கோடி ரூபாய் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இப்போது வார்பர்க் பிங்கஸ் நிறுவனத்திற்குக் கல்யாண் ஜூவல்லர்ஸில் 1,700 கோடி முதலீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிறுவனம் அன்மையில் இணையள ஜூவல்லரி நிறுவனமான கேன்ரரை வாங்கியதன் மூலம் வேகமாக வளர்ந்து வளரும் இணையதளக் கமர்ஸ் உலகிலும் கால் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more about: small town man successful

Have a great day!
Read more...

English Summary

How this small town man became the most successful jeweller in India