ஜூம் கார் மூலமாக கார் வாங்கினால் இஎம்ஐ கட்ட தேவையில்லை.. எப்படி தெரியுமா?

கார் வங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அதே நேரம் கார் வாங்கி விட்டு அதனைப் பயன்படுத்தாமல், இஎம்ஐ கூடச் செலுத்த முடியாமல் பலர் இருப்பார்கள்.

இதோ உங்களுக்காகவே இந்தக் கட்டுரை. புதிய கார் ஒன்றை வாங்கி நிதி நெருக்கடியில் உள்ளீர்களா. ஜூம் கார் வழங்கும் ஜேப் சேவையைப் பயன்படுத்துவதின் மூலமாக நீங்கள் காரை பயன்படுத்தாத நாட்களில் வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கலாம். இஎம்ஐ செலுத்தும் சிரமத்தில் இருந்து தப்பிக்கலாம்.

எப்படி உங்களது சொந்த காரை வாடகைக்கு விட்டுச் சம்பாதித்துப் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிப்பது என்று இங்குப் பார்ப்போம்.

ஜேப் என்றால் என்ன?
ஜேப் என்றால் என்ன?

உங்களது புதிய காரை ஜூம் கார் சேவையில் இணைத்து வாடகைக்கு விடலாம். உங்கள் காரை வாடகைக்குப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மூலமாகப் பணத்தைச் சம்பாதிக்கலாம்.

இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் காரினை ஜூம் காரில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் உங்களுக்குக் காரின் பயன்பாடு இல்லாத நாட்களைத் தேர்வு செய்து ஜூம் கார் நிறுவனத்திற்குத் தெரிவித்தால் போதும். அவர்கள் உங்கள் காரினை வாடகைக்கு விட்டு உங்களுக்கு அதன் மூலம் வரும் வருமானத்தில் கமிஷன் போக மீதத் தொகையை உங்களுக்கு அளிப்பார்கள்.

உங்களது கார் வாடகைக்கு எப்படிப் புக் செய்யப்படும்?
உங்களது கார் வாடகைக்கு எப்படிப் புக் செய்யப்படும்?

ஜூம் கார் பயனர்கள் தங்களுக்குக் கார் வேண்டும் என்னும் போது உங்களது கார் பட்டியலிடப்பட்டால் அதனைத் தேர்வு செய்வார்கள். அப்படி அவர்கள் உங்களது காரை தேர்வு செய்யும் போது அது கார் வாடகைக்கு விடப்படும்.

வாடகைக்கு அளிப்பதால் காருக்கு ஏற்படும் கோளாறுகளுக்கு யார் பொறுப்பு?

காரின் சுகாதாரத்தினை ஜூம் கார் பார்த்துக்கொள்ளும். அதுமட்டும் இல்லாமல் கார் சர்வீஸ் போன்றவைக்கான செலவையும் ஜூம் கார் நிறுவனமே ஏற்கும்.

 

பயனர் டெப்பாசி தொகை
பயனர் டெப்பாசி தொகை

உங்கள் காரை வாடகைக்கு எடுத்துச் செல்லும் போது பயனர் டெப்பாசிட் தொகை செலுத்துவதால் காரின் நிலையை நன்கு ஆராய்ந்த பிறகு டெப்பாசிட் தொகையைத் திருப்பி அளித்தால் போதும்.

வருமானத்தை டிராக் செய்ய முடியுமா?
வருமானத்தை டிராக் செய்ய முடியுமா?

கார் வாடகைக்கு விடும் போது எவ்வளவு வருமான கிடைத்துள்ளது என்பதை எளிதாக டிராக் செய்ய முடியும்.

ஜூம் காரில் எத்தனை கார் உள்ளன?
ஜூம் காரில் எத்தனை கார் உள்ளன?

ஜூம் கார் நிறுவனத்தின் கீழ் 2,400 கார்களுக்கும் அதிகமாக உள்ளன. தினமும் 3,800 க்கும் மேற்பட்ட பயணங்களை அளிக்கின்றன. 17,00,000 பயனர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை 18,00,00,000 கூடுதலான கிலோ மீட்டர் பயணத்தை ஜூம் கார் அளித்துள்ளது.

இஎம்ஐ
இஎம்ஐ

ஜூம் கார் மூலமாக உங்கள் காரை வாடகைக்கு விடும் வருமானத்தைப் பயன்படுத்தி எளிதாக உங்கள் கார் இஎம்ஐ-ஐ செலுத்த முடியும்.

வீடியோ
வீடியோ

எப்படி ஜேப் செவை வேலை செய்கின்றது என்ற வீடியோவை இங்கு பார்க்கலாம்.

Read more about: car zoomcars save emi

Have a great day!
Read more...

English Summary

Buy new car with zoomcars and save on car EMI