பதஞ்சலி-யின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆதித்யா.. ரூ.1,200 கோடிக்கு அதிபதி..!

பாபா ராம்தேவ்-இன் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு இருப்பதால், இதன் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்துப் பல முன்னணி நிறுவனங்களின் லாபத்தைக் குறைத்து வருகிறது.

இதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து புதுப்புது தயாரிப்புகளைச் சந்தையில் அறிமுகம் செய்து பல பிரிவுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது பதஞ்சலி.

இத்தகையை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது 30 வயதான ஒரு பட்டதாரி என்றால் உங்களால் நம்பமுடியுமா..?

பதஞ்சலி

இந்நிறுவனம் துவங்கிய சில நாட்களிலேயே இந்தியாவின் முன்னணி எப்எம்ஜிசி நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இன்று 15க்கும் அதிகமான பொருட்களை அறிமுகம் செய்து சந்தையில் மிகப்பெரிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

ஆதித்யா பிட்டி

குறுகிய காலத்தில் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றதற்கு முக்கியக் காரணம் சந்தையில் இருக்கும் பொருட்களின் விலையை விடவும் பதஞ்சலி நிறுவன தயாரிப்புகளின் விலை சற்று குறைவாகவே உள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் வெற்றிக்கு ஆரம்பம் முதலே துணை நிற்பது பிட்டி குரூப் நிறுவனத்தின் தலைவர் 30 வயதாகும் ஆதித்யா பிட்டி.

வளர்ச்சி

2013ஆம் ஆண்டில் வெறும் 1000 கோடி ரூபாய் என்பத மதிப்பீட்டில் இருந்த பதஞ்சலி நிறுவனம் வெறும் 4 வருடத்தில் 10,500 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

அதிநவீன விநியோக சந்தை

பதஞ்சலி நிறுவனம் முழுவதும் காவி உடை அணிந்த பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ண ஆச்சார்யா ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது. இவர்களால் தற்போதைய அதிநவீன விநியோக சந்தையில் ஈடுபடுவது சற்று கடினமாகவே இருந்தது. இதற்காக வந்தவர் தான் ஆதித்யா பிட்டி.

இந்த இடைப்பட்ட காலத்தில் பிட்டி குரூப் நிறுவனத்தின் வர்த்தகம் 1,200 கோடி ரூபாயாக உயர்ந்தது.

 

3 நிமிடத்தில் முடிவு

பதஞ்சலி நிறுவனத்திற்காக ஒற்றை வாசல் கொண்டு சப்ளை செயின் நெட்வொர்க் திட்டத்தை ஆச்சார்யா பாலகிருஷ்ணா அவர்களிடம் சமர்ப்பிக்கும் போது வெறும் 3 நிமிடத்தில் ஒப்புதலை அளித்தார் என ஆதித்யா தெரிவித்தார்.

கிருஷ்ணகுமார் பிட்டி

ஆதித்யாவின் சந்தை கிருஷ்ணகுமார் பிட்டி, பாபா ராம்தேவ் அவர்களைத் தீவிரமாகப் பின்தொடர்பவர். இவருக்கு ராம்தேவ் மற்றும் பால கிருஷ்ணா ஆச்சார்யா ஆகியோரை நேரடியாகத் தெரியும்.

பிட்டி குரூப்

1991ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட பிட்டி குரூப் ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் ஆர்வமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஷுப் டிவி என்ற ஆன்மீக சேனலை வைத்துள்ளது. மேலும் யோகர்ட் தொடர் நிறுவனமான யோகர்ட்பே என்ற நிறுவனத்தில் பெரிய அளவிலான பங்குகளை வைத்துள்ளது.

ஆதித்யா பிட்டி

இந்நிலையில் 2013ஆம் ஆண்டுப் பதஞ்சலி நிறுவனத்திற்காகத் தனியொரு விநியோக சேவை அளிக்கும் நிறுவனத்தை லண்டன் கிங்ஸ் கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்ற ஆதித்யா பிட்டி தலைமையில் துவங்கப்பட்டது.

1997ல் முதல் வர்த்தகம்

பதஞ்சலி நிறுவனம் 1997ஆம் ஆண்டு முதல் முறையாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாகச் சிறு பார்சி கடையைத் திறந்தது. ஆனால் இதில் பெரிய அளவிலான வெற்றியைப் பதஞ்சலி பெறவில்லை.

பிட்டி குரூப் நிறுனத்துடன் சேர்ந்த பின்பு பல பிரிவுகளில் இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்யத் துவங்கியது. அன்று முதல் பதஞ்சலிக்கு வெற்றி முகம் தான்.

 

10,000 கடைகள்

தற்போது பதஞ்சலி நிறுவனத்திடம் சுமார் 10,000 பிரான்சைஸ் கடைகளை வைத்துள்ளது, தனது தயாரிப்புகளை உள்ளூர் மளிகைக் கடைகளுக்கு இணையாக விற்பனை செய்து வருகிறது.

ரிலையன்ஸ் ரீடைல்

பதஞ்சலி மற்றும் பிட்டி குரூப் கூட்டணியில் உருவான சப்ளை செயின் நிறுவனத்தின் முதல் முயற்சியாக ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தை இந்நிறுவனம் அணுகியது.

மக்களின் முடிவு

இப்போது ரிலையன்ஸ் ரீடைல் தலைவர் தாமோதர் மால் எந்தப் பொருட்கள் விற்கும் என்பது நீங்களோ நானோ முடிவு செய்ய முடியாது மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று பதஞ்சலி பொருட்களை ரிலையன்ஸ் ரீடைல் கடைகளில் விற்பனை செய்ய அனுமதி அளித்தார்.

ஜிரோ டிஸ்கவுன்ட்

பதஞ்சலி நிறுவனத்தின் வர்த்தகத் துவக்கத்தில் எவ்விதமான பெரிய விளம்பரங்களையும் செய்யாமல் சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு அளிக்கும் தள்ளுபடிகள் என எதுவும் இல்லாமல் ஜீரோடிஸ்கவுன்ட் முறையில் சந்தைக்கு வந்து வெற்றிபெற்றது.

மஹிந்திரா உடன் கூட்டணி

2016ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி வைத்திருத்த ஏபிக் டிவியை மஹிந்திரா மற்றும் பட்டி குழுமம் இணைந்து வாங்கியது.

வாய்ப்பு

இப்படிக் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் வெற்றியாக மாற்றிக்கொண்டது பதஞ்சலி நிறுவனம். இந்நிறுவனத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாகவும் அடித்தளமாக இன்றளவு இருப்பது 30 வயதான ஆதித்யா உருவாக்கிய விநியோக நிறுவனம் தான்.

Have a great day!
Read more...

English Summary

30 year old graduate who makes Patanjali as grand success