என்ஆர்ஜ-கள் ஆதார் கார்டை பெறுவது எப்படி..?

ஆதார் கார்டு அல்லது தனி நபர் அடையாள அட்டையினை இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டில் வசிப்பவர்களும் விண்ணப்பித்துப் பெற முடியும். இந்தியர்கள் ஆதார் கார்டு பெற என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்கிறார்களோ அதே போன்று என்ஆர்ஐ-ம் ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆதார் கார்டினை பெறலாம்.

ஆதார் சட்டம் 2016-ன் படி இந்தியாவில் ஆண்டுக்கு 182 நாட்களுக்கும் அதிகமாக வசிப்பவர்கள் மட்டுமே ஆதார் கார்டினை பெற முடியும். ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க நீங்கள் இணையதளம் மூலமாகச் சந்திப்பிற்கான நியமனம் பெற்று அந்தத் தேதிகளின் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆதார் கார்டுக்கு என்ஆர்ஐ எப்படி விண்ணப்பிப்பது என்று இங்குப் பார்ப்போம்.

இணையதளம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளமான https://uidai.gov.inன் மூலமாக அருகில் உள்ள தார் மையத்தினை அறியலாம்.

அப்பாயிண்ட்மெண்ட்

uidai.gov.in இணையதளம் மூலமாக ஆதார் விண்ணப்பித்தற்கான அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்யலாம். இல்லை என்றால் ஆதார் மையத்திற்கு நேரில் செல்லவும்.

ஆவணங்கள்

ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கச் செல்லும் போது முகவரி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு போன்ற அடையாள ஆவன நகல்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

விண்ணப்பம்

ஆதார் மையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பித்தன பூர்த்திச் செய்து ஆவணங்களை இணைத்து அலுவாலரிடம் சமர்ப்பித்தால் அவர் உங்களது பையோமெட்ரிக் விவரங்களைப் பெற்றுக்கொள்வார்.

ஒப்புகை

இறுதியில் உங்களுக்கு ஒப்புகை சீட்டு ஒன்று அளிக்கப்படும். அதனை ஆதார் கார்டு பெறும் வரை வைத்து இருத்தல் நல்லது. ஒப்புகை எண்ணை வைத்து உங்கள் ஆதார் விண்ணப்பத்தின் நிலையினை இணையதளம் மூலமாக அறிய முடியும்.

Have a great day!
Read more...

English Summary

How to get Aadhaar card if you are a NRI