இந்தியாவின் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்..!

இந்தியாவில் நடுத்தரக் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியால் தற்போது ரியல் எஸ்டேட் துறை பெரிய அளவிலான ஆதாயத்தைக் கண்டுள்ளது.

மத்திய அரசு அடிக்கடி கூறுவதைப்போல் கருப்புப் பணம் அதிகம் புழங்கும் இந்திய ரியல் எஸ்டேட் துறை 2017ஆம் ஆண்டுப் பல தடைகளைத் தாண்டி மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான நிறுவனங்கள் எது என்பதேயே பார்க்கப்போகிறோம்.

டிஎல்எப்

டெல்லியை தலைமையாகக் கொண்டு இயங்கும் டிஎல்எப் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாகத் திகழ்கிறது. மேலும் இந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 70 வருடங்களுக்கு அதிகமான காலத்திற்கு இத்துறையில் வர்த்தகம் செய்து வருகிறது.

யுனிடெக் ரியல் எஸ்டேட்

பலதரப்பட்ட துறையில் வர்த்தகம் செய்து இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாகத் திகழ்கிறது யுனிடெக் ரியல் எஸ்டேட் நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவில் முக்கியமான ஆடம்பர திட்டங்களைக் கையில் எடுத்து வெற்றிகரமாக முடித்து வருகிறது.

சூப்பர்டெக்

25 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட சூப்பர்டெக் நிறுவனம் குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்நிறுவனத்தின் திட்டங்கள் அதிகளவில் வட இந்தியாவை மையமாக வைத்தே இயங்கி வருகிறது.

ஓமேஸ்

இந்தியாவில் 30க்கும் அதிகமான நகரங்களில் வர்த்தகம் செய்து வரும் ஓமேஸ் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் தற்போது வட இந்தியா முழுவதும் மலிவான வீடுகளைக் கட்டி விற்பனை செய்யும் பெரிய அளவிலான முயற்சியில் இறங்கியுள்ளது.

ஓப்ராய் ரியாலிட்டி

விகாஸ் ஓப்ராய் தலைமையில் இயங்கும் ஓப்ராய் ரியாலிட்டி மும்பையைத் தலைமையாகக் கொண்டு ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்நிறுவனம் அதிகளவில் ரீடைல் கட்டிடங்கள், மால்கள் ஆகியவற்றைக் கட்டி வருகிறது.

 

அன்சால் ஏபிஐ

டெல்லி, உத்திர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வீடுகள், வர்த்தகக் கட்டிடங்கள் மற்றும் ரீடைல் கட்டிடங்களைக் கட்டி வருகிறது.

கடந்த வருடம் ஐபிஎம், சிஸ்கோ நிறுவனங்களுடன் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டத்தில் கூட்டணி அமைத்துள்ளது.

 

ஜேபி இன்பராடெக்

ஜேபி குரூப் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜேபி இன்பராடெக், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய பகுதியில் பெரிய டவுன்சிப் திட்டங்களை இயங்கி வருகிறது.

காட்ரிஜ் பிராபர்டீஸ்

இந்தியாவில் 12 நகரங்களில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைச் செய்து வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

Big Shots of Indian real estate market - Tamil Goodreturns | இந்தியாவின் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்.. யார் தெரியுமா..? - தமிழ் குட்ரிட்டன்ஸ்