மூட்டை தூக்கும் தொழிலாளியும் கோடிஸ்வரர் ஆக முடியும் என்பதற்கு இவர் உதாரணம்..!

சென்னை: லாஜிஎஸ்டிக்ஸ், சொகுசு ஹோட்டல், எம்ஜிஎம் பொழுதுபோக்குப் பூங்கா போன்ற மிகப் பெரிய வர்த்தகச் சாம்ராஜியத்தினை உருவாக்கியிருந்த எம்ஜி முத்து அவர்கள் உடல் நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் 23/05/2018 அன்று உயிர் பிரிந்தார்.

ஏழ்மையான ஒரு குடும்பத்தில் இருந்து பிறந்த உலகளவில் வர்த்தகச் சாம்ராஜியத்தினைப் படைத்த எம்ஜி முத்து அவர்களின் வளர்ச்சியைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

பள்ளிப் படிப்பு என்பது எட்டாக் கனியாக இருந்த, ஏழை குடுப்பத்தில் பிறந்த எம்ஜி முத்துவின் வளர்ச்சி இன்று மிகப் பெரியது எனலாம். எப்படி ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாக இவரது கதை இருக்கும்.

படிப்பு இல்லை என்றாலும் தான் செய்யும் வணிகத்தில் இவர் தான் கிங். துறைமுகத்தில் கப்பலில் இருந்து மூட்டைகளை இறக்கி ஏற்றும் கூலியாகத் தனது வாழ்க்கையினைத் துவங்கியுள்ளார். தனது கனவை நோக்கி மிகவும் கடினமாக உழைத்து இன்று கோடி கணக்கில் சொத்துக்கள் இவர் வசம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

கிராமம்

தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் கூலி தொழிலாளியின் மகனாகப் பிறந்த முத்து இந்திய நிறுவனங்கள் இடையில் மிகவும் பிரபலமான எம்ஜிஎம் குழுமத்தின் தலைவர் ஆவார்.

நம்பிக்கை

தினமும் ஒரு வேலை உணவு கூடக் கிடைக்காத நிலையில் இவரது குடும்பம் இருந்த போது என்றாவது ஒரு நாள் இதனை நான் மாற்றுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்துள்ளார்.

பள்ளி

முத்துவிற்கு 10 வயது ஆகும் போது தனது கிராமத்தில் உள்ள சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து தானும் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் இவரது பசியில் பாடத்தினை எப்படிக் கவனிப்பது என்று தெரியாமல் சில நாட்களில் படிப்பிற்கு முழுக்கு போட்டார்.

கூலி வேலை

அந்தச் சிறு வயதில் தனது தந்தையுடன் ஒரு விவசாயத் தின கூலியாக வேலைக்குச் சேர்ந்து சில ஆண்டுகள் பணிப்புறிந்துள்ளார்.

மெட்ராஸ் துறைமுகம்

1957-ம் ஆண்டு மெட்ராஸ் துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்த முத்து 10 வருடக் கடின உழைப்பிற்குப் பின்பு பணத்தினைச் சேமிக்கும் அளவிற்குச் சம்பாதிக்கத் துவங்கியுள்ளார். தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுடன் நன்றாகப் பழகி வந்த முத்து தனது சேமிப்பை வைத்துச் சிறியதாகத் தளவாடங்கள் (லாஜிஸ்டிக்ஸ்) சேவை அளிக்கும் நிறுவனத்தினைத் துவங்கினார்.

லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம்

தற்போது அந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இவரை இந்தியாவின் முக்கிய வணிகராக மாற்றியுள்ளது. நிறுவனத்தினைத் துவங்கிய போது சிறு நிறுவனங்களுக்குப் பொருட்களை ஏற்றுவது மற்றும் இறக்குவது போன்ற பணிகள் இவருக்குக் கிடைத்து.

மிஷன்

தனக்குப் பொருட்கள் ஏற்ற இறக்கு ஆடர்கள் கிடைக்கத் துவங்கிய உடன் இவர் முதலில் திட்டமிட்டது எக்காரணத்தினைக் கொண்டு வாடிக்கையாளர்கள் புகார் அளிக்காத படி சேவை அளிக்க வேண்டும் என்பது ஆகும். அதே போன்று சேவையினை இவர் வாடிக்கையாளர்களுக்கு அளித்ததால் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளார்.

எம்ஜிஎம்

பின்னர் எம்ஜிஎம் என்ற நிறுவனத்தினைத் துவக்கிய முத்து மிகப்பெரிய சாம்ராஜியத்தினை இன்றை வர்த்தக உலகில் நிறுவியுள்ளார். இவரது வாடிக்கையாளர்களின் அறிந்து பெரிய நிறுவனங்களும் ஆர்டர்கள் அளிக்க ஆரம்பித்துள்ளன. இன்று இந்தியாவின் மிகப் பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாக எம்ஜிஎம் உள்ளது

பிற தொழில்

லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற எம்ஜிஎம் குழுமம் நிலக்கரி, கனிம சுரங்கம், உணவு நிறுவனங்கள், சர்வதேச ஹோட்டல்கள் போன்றவற்றை நிறுவி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.

மது பானம்

அன்மையில் எம்ஜிஎம் குழுமம் தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தினைச் சேர்ந்த மதுபான நிறுவனத்தினைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் வோட்கா மற்றும் விஸ்கி போன்றவையினைத் தயாரித்து வருகிறது. விரைவில் கர்நாடகாவில் மதுபான ஆலையினைத் துவங்கும் எண்ணத்தில் எம்ஜிஎம் உள்ளது.

மேரி பிரவுன்

ஒரு நேரத்தில் கூலியாக இருந்த இவர் தற்போது மலேசிய துரித உணவகமான மேரி பிரவுனின் இந்திய பிராஞ்சிஸ்களையும் நிர்வகித்து வருகிறார்.

பழமொழி

மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்ற பழமொழியைப் போன்று ஒவ்வொரு நாளும் தனது இலக்கினை நோக்கி கடின உழைப்புடன் செயல்பட்ட முத்து பள்ளி படிப்பு கூட முறையாக இல்லாமல் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார்.

முடிவுரை

எம் ஜி முத்துவின் கதை உங்களைக் கண்டிப்பாகக் கவர்ந்து இருக்கும் மற்றும் பாடங்களைக் கற்பித்து இருக்கும் என்று நம்புகிறேன். இதேப்போன்று மேலும் பல வெற்றிக் கதைகளைப் படிக்கத் தொடர்ந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்கு வருகை தரவும்.

தோல்வியில் இருந்துதான் வெற்றி பிறக்கும்

தோல்வியில் இருந்துதான் வெற்றி பிறக்கும் என்பதற்கு இவரை விட பெரிய உதாரணம் இருக்கமுடியாது..

சவுந்தரராஜனின் ரூ.5,000 கோடி சொத்து..

11ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த சவுந்தரராஜனின் ரூ.5,000 கோடி சொத்து..

விஸ்வரூப வளர்ச்சி..!

25 ரூபாயுடன் துவங்கிய பயணத்தின் விஸ்வரூப வளர்ச்சி..!

Have a great day!
Read more...

English Summary

How a Coolie for Tamil Nadu builds RS 2,500 crore Empire