டிரம்புக்கு நோ சொன்னது குடியுரிமை அமைப்பு.. அமெரிக்காவில் இந்தியர்கள் கொண்டாட்டம்..!

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களையும், ஐடி ஊழியர்களையும் வேதனையில் ஆழ்த்திய ஹெச்1பி விசா கால நீட்டிப்புக்குத் தடை விதித்து, ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் டிரம்ப் அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என அமெரிக்கா குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

6 வருட காலம்
6 வருட காலம்

அமெரிக்க அரசு AC-21 சட்டத்தின் கீழ் இருக்கும் 104(c) பகுதியைத் திருத்தி அமைத்து ஹெச்1பி விசா வைத்துள்ளவர்கள் கிரீன் கார்டு விண்ணப்பத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருப்புக் காலத்தில் 6 வருடம் மட்டுமே விசா காலம் நீட்டிக்க வேண்டும், அதன் பின் நீட்டிக்கக் கூடாது என்று கோரிக்கையில் விடுத்தது.

மாற்று வழி
மாற்று வழி

அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்றுத் திருத்தி அமைத்தாலும் AC-21 சட்டத்தின் கீழ் இருக்கும் 106(a)-(b) பகுதியின் வாயிலாக விசாவிற்கு ஹெச்1பி விசா வைத்துள்ளவர்கள் 1 வருட கால நீட்டிப்பு பெற முடியும், இதனால் அமெரிக்க அரசின் தற்போதைய கோரிக்கையை ஏற்ற முடியாது என அமெரிக்கா குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை அமைப்பின் தலைமை செய்தி தொடர்பாளர் ஜோனத்தன் வித்திங்டன் தெரிவித்துள்ளார்.

ஆதரவு
ஆதரவு

மேலும் டிரம்ப் அரசின் Buy American, Hire American கொள்கைக்கு இணங்க பல்வேறு சட்ட மற்றும் விதிமுறை மாற்றங்களுக்கு அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் தற்போது வைக்கப்பட்டுள்ள கோரிக்கை நிரந்தரத் தீர்வு கிடையாது என்றும் வித்திங்டன் கூறினார்.

கொண்டாட்டம்..
கொண்டாட்டம்..

அமெரிக்காவில் ஹெச்1பி விசா கொண்டு சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் சுமார் 40 சதவீதம் பேர் அமெரிக்காவை விட்டு வெளியேற்றவும் அல்லது 1 வருட காலநீட்டிப்புச் செய்ய வேண்டி கட்டாயத்தில் இருந்தனர்.

அமெரிக்கா குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை அமைப்பு டிரம்ப் அரசின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

பேஸ்புக் பதிவு
பேஸ்புக் பதிவு

இந்தச் செய்தி குறித்து அமெரிக்காவின் Immigration Voice என்ற அமைப்பின் பேஸ்புக் தளம் We are ECSTATIC to share this Breaking News என்று இச்செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தது.

USCIS அமைப்பு
USCIS அமைப்பு

கிரீன் கார்டுக்காக விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு 104 பிரிவின் கீழ் 6 வருட விசா காலம் நீட்டிப்புக்குப் பின் மறுநீட்டிப்புக்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் இருந்து பின்வாங்குவதாக USCIS அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 6 வருடம் விசா காலம் நீட்டிப்பு செய்யப்பட்டவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் மீண்டும் கால நீட்டிப்பு பெற முடியும்.

 

Read more about: nri h1b visa visa usa

Have a great day!
Read more...

English Summary

Celebrating moment for Indians: As Trump administration drops H1B visa proposal