2018 பட்ஜெட்டின் போது மியூச்சுவல் ஃபண்டு பென்ஷன் திட்டம் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதா?

நீண்ட காலமாக மியீச்சுவல் ஃபண்டு திட்டங்களில் வரி விலக்குடன் கூடிய பென்ஷன் திட்டம் ஒன்று வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சில மியூச்சுவல் ஃபண்டு வல்லுநர்கள் நடப்புப் பட்ஜெட்டில் வரும் என்று குறி வருகின்றனர்.

மத்திய அரசு மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் பென்ஷன் திட்டத்தினை அறிமுகம் செய்தால் நீண்ட கால முதலீட்டாளர்கள் ஆர்வமாக முதலீடுகளைச் செய்ய வாய்ப்புகள் உண்டு.

ஓய்வு திட்டம் அளிக்கும் நிறுவனங்கள்

தற்போது யூடிஐ, பிராங்க்லின், ரிலையன்ஸ் எச்டிஎப்சி, டாடா மற்றும் பல மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வரி விலக்குடன் கூடிய ஓய்வு திட்டங்களை வழங்கி வருகின்றன.

ஓய்வூதிய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்

ஆனால் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் ஓய்வூதிய திட்டம் போன்ற முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதிகளைப் பெற அமுடிவதில்லை என்றும் கூறுகின்றன. ஈபிஎப், இன்சூரன்ஸ் மற்றும் ஈக்விட்டியுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் போன்று வரி விலக்கு அளிக்கப்பட்டால் தான் அதிக நபர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகளை அதிகரிப்பார்கள் என்று கூறுகின்றனர்.

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல ஓய்வுதிய திட்டங்களை அளிக்கின்றன. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொருத்த வரையில் சில நிறுவனங்களைத் தவிர வேறு யாரும் ஓய்வு திட்டங்களை அளிப்பதில்லை. ஆனால் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற ஒரு திட்டமாக மியூச்சுவல் ஃபண்டுகள் கருதப்படுகின்றன.

குற்றச்சாட்டு

ஓய்வு திட்டங்கள் போன்றவற்றை அளிக்க முடியாததால் தங்களால் முதலீட்டாளர்களை நீண்ட கால முதலீட்டிற்காக அதிக அளவில் ஈர்க்க முடியவில்லை என்று நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.

இன்சூரன்ஸ் போன்றே குறிப்பிட்ட காலத்திற்குள் ஓய்வூதியம் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது முதிர்வுக்கு முன் எடுக்கக் குறைந்தபட்ச காலக்கெடு மற்றும் அபராதம் போன்றவற்றை விதிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

 

ஏன் இன்சூரன்ஸ்?

இன்சூரன்ஸ் திட்டங்கள் அதிக விலை என்ற போதிலும் நிலையான லாபம் ஒன்றை அளிக்கும் என்று தான் அதிக நபர்கள் அதில் முதலீடு செய்கின்றனர். டெர்ம் இன்சீரன்ஸ் கீழ் லைப் பாலிசிகளைக் குறைந்த விலையில் பெற்றுக்கொண்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்ல ஒரு முதலீடாகவும் அதிக லாபம் அளிப்பதாகவும் இருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

Will mutual funds get a pension plan in budget 2018?