தமிழ்நாடு முதல் அமெரிக்கா வரை கொடிக்கட்டி பறக்கும் திருநெல்வேலி ஐசக்..!

திருநெல்வேலியைச் சேர்ந்த ஏ.டி.பத்மாசிங் ஐசக் என்பவரால் 1995-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட நிறுவனமே ஆச்சி குழுமம். இன்று ஆச்சி மசாலா தமிழகம் மட்டும் இல்லாமல் உலகளவில் பல இந்தியர்கள் பயன்படுத்தும் மசாலா பிராண்டாக மாறியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் அச்சி குழுமத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவதுடன் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடப்பதாக 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்துள்ளனர். எனவே ஆச்சி குழுமம் வளர்ந்த கதையினை விளக்கமாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ஆச்சி குழுமம்
ஆச்சி குழுமம்

ஆச்சி குழுமத்தின் கீழ் ஆச்சி மசாலா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பைசஸ் & ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பெஷல் ஃபுட்ஸ் பிரைவேட் ஃபுட்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் உள்ளன.

ஆச்சி நிறுவனத்திற்கு முன்பு
ஆச்சி நிறுவனத்திற்கு முன்பு

ஆச்சி நிறுவனம் துவங்குவதற்கு முன்பு பிபிஏ பட்டதாரியான பத்மாசிங் ஐசக் 50,000 ரூபாய் சம்பளத்திற்காகப் பணிபுரிந்து வந்தார். ஆனால் இவருக்கு எப்படியாவது மிகப் பெரிய ஒரு நிறுவனத்தினைக் கட்டமைக்க வேண்டும் என்று கனவு இருந்தது.

ஆச்சி மசாலா
ஆச்சி மசாலா

வேலை பார்த்துக்கொண்டே ஆச்சி மசாலா நிறுவனத்தினை 1995-ம் ஆண்டுத் துவங்கிய ஐசக் முதன் முதல் ஒரே ஒரு மசாலாவினை மட்டுமே தயாரித்து வந்தார். பின்னர் 2013-ம் ஆண்டு படிப்படியாக இது 150 தயாரிப்புகளாக மாறியிருந்தன.

தயாரிப்புகள்
தயாரிப்புகள்

முதலில் மசாலா பொருட்கள் மட்டுமே தயாரித்து வந்த ஐசக் மசாலாவுடன், கோதுமை பொருட்கள், ஊறுகாய், புளி சாத பொடி, பிஸ்கேட் மற்றும் ஜாம் போன்றவற்றையும் தயாரிக்கத் துவங்கி இன்று சத்துணவுகள், ஆயுர்வேத பொருட்கள் போன்றவற்றையும் தயாரித்து வருகிறார்.

100% ஈடுபாடு
100% ஈடுபாடு

ஓரு முடிவை எடுத்தால் அதில் 100 சதவீத உழைப்பினை அளிப்பதில் பத்மாசிங் ஐசக்கிற்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று கூறலாம். தான் நினைத்த காரியம் முடியும் வரை சரியான தூக்கமும் இவருக்கு வராது, எப்போதும் அது பற்றியே நினைத்து இருப்பேன் என்றும் கூறுகிறார்.

விடா முயற்சி
விடா முயற்சி

ஒருவேலை தான் எதிர்பார்த்த இலக்கை அடைவதில் தோல்வி அடைந்தாலும் தனக்குத் தானே ஊக்கம் அளித்துக்கொண்டு அதில் எப்படி வெற்றிபெறுவது என்றும் விடா முயற்சியாகப் போராடுவேன் என்றார்.

தரம்
தரம்

தான் புதிதாக ஒரு தயாரிப்பினை வெளியிடுகிறேன் என்றால் அதன் தரம் முதலில் என்னைத் திருப்தி படுத்தினால் மட்டுமே சந்தைக்குக் கொண்டு செல்வேன் , விற்பனை செய்வேன் என்றும் அவர் கூறினார்.

வெற்றிக்கான காரணம்
வெற்றிக்கான காரணம்

சவால்களை எதிர்கொள்வது தனக்குப் பிடிக்கும் என்றும் அதில் வெற்ற பிறகு கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது என்றும் அது தான் தனது வெற்றிக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்கள்
ஊழியர்கள்

பல நிறுவனங்கள் ஊழியர்களின் திறன் குறைவாக உள்ளது என்று எல்லாம் பணியை விட்டு நீக்குவார்கள். ஆனால் தான் அப்படிச் செய்வதில்லை. எல்லோரிடமும் ஒரு திறமை இருக்கும். அதற்கு ஏற்றப் பணியை மாற்றி அளித்து, ஊக்கமளித்து வேலை வாங்குவதாகவும் யாரும் பணியில் இருந்து நீக்குவதில்லை என்றும் ஐசக் கூறுகிறார்.

மாற்றுத் திறனாளிகள்
மாற்றுத் திறனாளிகள்

தனது நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணிப்புரிவதகாவும், 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிற மாநிலங்களில் இருந்து பணிப்புரிவதாகவும் அவர்களுக்கு ஏற்ற வேலை மற்றும் தங்குமிடம் இலவச உணவு போன்றவற்றை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

வாய்ப்புகள்
வாய்ப்புகள்

புதிய வாய்ப்புகளை நோக்கு தனது காதை எப்போதும் கூர்மையாக வைத்து இருப்பதாகவும் எந்த வாய்ப்பினையும் தவறவிட்டதில்லை என்றும், கிராமப்புற சந்தையினைப் பிடிப்பதில் மிகப் பெரிய கவனம் செலுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

புதிய சந்தைகள்
புதிய சந்தைகள்

தற்போது 6 மாநிலங்கள் சார்ந்த மசாலாக்களை உற்பத்தில் செய்து வருவதாகவும், சர்வதேச மசாலா பொருட்களையும் தயாரித்துச் சந்தைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

வளர்ச்சி
வளர்ச்சி

சென்ற மூன்று ஆண்டுகளில் மட்டும் 30 சதவீத வளர்ச்சியினை ஆச்சி மசாலா பெற்றுள்ளதாகவும் தேசிய அளவில் 15 சதவீத சந்தையினைத் தன் வசம் வைத்துள்ளதாகவும், 4,000 ஏஜெண்ட், 12 லட்சம் சில்லைரை வணிகர்கள் ஆதரவுடன் 1,200 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்து வருவதாகவும் கூறினார்,

சர்வதேச சந்தை
சர்வதேச சந்தை

ஆச்சி மசாலா தயாரிப்புகள் ஐக்கிய அமெரிக்கா, கனடா, யு.கே, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா குடியரசு, D.R.காங்கோ, கென்யா, தன்சானியா, பப்புவா நியூ கினியா, மொசாம்பிக், மொரிஷியஸ், சீஷெல்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சவுதி அரேபியா இராச்சியம், லெபனான், இலங்கை, மாலதீவு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலை
தொழிற்சாலை

சென்னை புறநகரான ஆயனம்பாக்கத்தில் தினமும் 120 மெட்ரிக் டன் அளவிலான மசாலாக்களைத் தயாரிக்கும் அளவிற்கு மிகப் பெரிய தொழிற்சாலையுடன் இயங்கி வருகிறார்.

வீடியோ
வீடியோ

வீடியோ

Have a great day!
Read more...

English Summary

Padmasingh Isaac’s Aachi Masala success story