10வது மட்டுமே படித்த பிரேம்-இன் சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய்.. யார் இவர்?

மும்பை: கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் மொழி தெரியாத ஒரு ஊரில் உதவிக்கு யாரும் இல்லாமல் சிக்கி கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்.

அப்படி 17 வயதில் மும்பை சென்று பல சிக்கல்களுக்குப் பிறகு தனது கடுமையான உழைப்பினால் இன்று 40 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியாகப் பிரேம் கணபதி வளர்ந்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? வாங்கப் பார்ப்போம்?

மும்பை பயணம்

தூத்துக்குடியில் 10 வகுப்பு மட்டும் படித்துவிட்டு நீண்ட காலமாக வேலை இல்லாமல் சென்னைக்குச் சென்ற பிரேம் கணபதிக்கு மாதம் 250 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலைக் கிடைக்கிறது. அதைச் செய்து கொண்டு இருக்கும் போது மும்பைக்குச் சென்றால் 1,200 ரூபாய் மாத சம்பளம் கிடைக்கும் என்பதைக் கேட்டு 1990-ம் ஆண்டு வேலை தேடி தெரிந்த ஒருவர் துணையுடன் மும்பை செல்கிறார் பிரேம் கணபதி.

ஏமாற்றம்

மும்பை பாந்ரா ரயில் நிலையத்தினை அடைந்த உடன் யாரை நம்பி இவர் மும்பை சென்றாரோ அவரே இவரது உடைமைகள், பணம் என அனைத்தையும் திருடிக்கொண்டு போட்டுக்கொண்டு இருந்த துனியுடன் விட்டுச் சென்றுவிட்டார்.

தவிப்பு

மும்பைக்குச் செல்வதாக வீட்டில் கூட இவர் தெரிவிக்கவில்லை என்ற பயம் ஒருபக்கம், இந்தி தெரியாது என்ன செய்வது என்று முழித்துக்கொண்டு இருந்த பிரேம் கணபதிக்கு மும்பை தனது வாழ்க்கையை மாற்றப் போகிறது என்பது மட்டும் தெரியவில்லை.

உதவி

இவரைப் பார்த்த தமிழர் ஒருவார் அருகில் உள்ள கோவில் ஒன்றுக்கு அழைத்துச் சென்று ரயில் டிக்கெட்டிற்குத் தேவையான பணத்தினை வசூல் செய்து அளித்துள்ளார். ஆனால் அங்கு இருந்து திரும்ப மனம் இல்லாத பிரேம் கணபதி மாதம் 150 ரூபாய் சம்பளத்திற்கு மஹிம் பேக்கரியில் பணிக்குச் சேருகிறார்.

சொந்த தொழில்

இரண்டு வருடத்தில் சொந்தமாக இட்லி கடை வைக்கும் அளவிற்குப் பணத்தினைச் சம்பாதிக்கும் பிரேம் 1,000 ரூபாய் செலவு செய்து வாஷி ரயில் நிலையத்தின் அருகில் தொழிலை துவங்குகிறார். நல்ல லாபம் கிடைக்கச் சில நாட்களில் இவருக்குக் கூடுதலாக வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. தனது தம்பி இரண்டு பேரை மும்பைக்கு அழைத்துச் செல்கிறார்.

சுத்தம்

சுத்தமாக உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலைக்குத் தொப்பி, கைகளுக்கு உறை போன்றவற்றைப் போட்டுக்கொண்டு ரோட்டுக் கடையில் வியாபாரம் செய்வதைப் பார்த்த வாடிக்கையாளர்களைக் கவர வியாபாரம் மேலும் சூடு பிடித்தது.

முதல் கடை

ரோட்டு தள்ளுவண்டி கடைக்கு உரிமை இல்லாததால் அடிக்கடி அதற்கு அபராதம் செலுத்தி வந்த நிலையில் 50,000 ரூபாய் டெபாசிட் மாதம் 5,000 வடகைக்கு ஒரு கடையினை வாடகைக்கு எடுத்து சிரிய ரெஸ்டாரண்ட் ஒன்றைத் துவங்குகிறார்.

இணையதளம்

தொடர்ந்து இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் நட்பினை பெற்றுக்கொண்டு இணையதள உதவியுடன் புதிய உணவுகளை அறிமுகம் செய்ய எண்ணுகிறார்.

டிரேடு மார்க் தோசை

தோசையுடன் தனது ஆராய்ச்சியினைத் துவங்கிய இவர் சேஷ்வாங் தோசா, பன்னீர் சில்லி தோசா, ஸ்பிரிங் ரோல் தோசா என 26 வகையான தோசைகளை அறிமுகம் செய்தார். 2002-ம் ஆண்டு இதுவே 105 வகைத் தேசைகளுடம் இவரது கடை மும்பையில் மிகவும் பிரபலமானது மட்டும் இல்லாமல் தற்போது 27 டிரேடு மார்க் தோசைகளையும் விற்று வருகிறார்.

மால் கனவு

தனது தோசை கடையினை மால்களில் திறக்க வேண்டும் என்ற இவரது கனவிற்காகப் பல மால்களில் கேட்டும் அனுமதி அளிக்கவில்லை. இங்கு மிகப் பெரிய பிராண்டுகள் தான் திறக்க முடியும் என்று இவரது கடைக்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.

மாலில் முதல் கடை

ஒரு நாள் வாஷியில் உள்ள செண்டர் ஒன் மாலில் இவர் கடை வாடிக்கையாளராக வரும் நிர்வாகி உதவி செய்ததை அடுத்து மாலில் தோசை கடை ஒன்றை நிறுவினார். மாலில் இவரது பிஸ்னஸ் வெற்ற பெற்றது மட்டும் இல்லாமல் பிராஞ்சிஸ் வெண்டும் என்ற கோரிக்கையும் வர அதற்கும் அனுமதி அளித்துள்ளார்.

பிராஞ்ச்சிஸ்

பிராஞ்ச்சிஸ் யார் பெற்றாலும் அந்த உணவகத்திகு தேவையான பொருட்களும் தங்களிடம் இருந்து மட்டுமே பெற்றுப் பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனையுடன் அனுமதிகளை வழங்குகிவருகிறார்.

கிளைகள்

தோசா பிளாசா நிறுவனத்தின் இணையதளத்தில் 2012-ம் ஆண்டு வரை இந்தியாவில் 45 உணவகங்களும், வெளிநாடுகளில் 10 உணவகங்களும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

1990-ம் ஆண்டு ஒரு ரூபாய் கூட இல்லாமல் மும்பை பாந்ரா ரயில் நிலையம் வெளியில் நின்றுகொண்டு இருந்த பிரேம் கணபதியின் வெற்றிக் கதை எப்படி? மேலும் இதுபோன்ற வெற்றிக் கதைகளைத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தில் படிக்கக் கிளிக் செய்க.

 

Have a great day!
Read more...

English Summary

In 1990 no single penny. But in 2017 40 Crore. How it is possible by a Dosa plaza man