4 மாத தொடர் உயர்வுக்கு பின் தங்கம் விலை குறைந்தது.. என்ன காரணம்..?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு மற்றும் திருமணச் சீசன் என்பதால் விற்பனை அதிகரித்து இருப்பது பொன்ற காரணங்களால் தங்கம் விலை 4 மாதங்களுக்குப் பிறகு குறைந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 1 கிராம் 22 காரட் தங்கம் சென்ற சனிக்கிழமை 2,949 ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்க நகை 23,592 ரூபாய் என விற்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் தங்கம் விலை சரிய துவங்கியுள்ளது.

ஆபரணத் தங்கம் விலை

திங்கட்கிழமை 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 13 ரூபாய் சரிந்து 2936 ரூபாய் என விற்பனையான நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாகச் செவ்வாய்க்கிழமையான இன்று கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 காரட் தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 24 காரட் தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 3068 என்றும் 8 கிராம் 24,544 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூபாய் மதிப்பு

இந்திய ரூபாய் மதிப்பு 2 மாத சரிவை சந்தித்த அதே நேரம் அமெரிக்க டாலரின் மதிப்பு பழைய நிலைக்குத் திரும்பியதால் தான் தங்கம் விலை தொடர்ந்து 4 மாதங்களாக உயர்ந்து வந்துள்ளது. அமெரிக்கச் சந்தையிலும் 2 வாரங்கள் இல்லாத அளவிற்குத் தங்கத்தின் மதிப்பு 1 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

மறுபக்கம் வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு 41.20 ரூபாய் என்றும் கிலோ 41,200 ரூபாய் என்றும் செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

Gold Price Back to Trend; Falls After 4 Continuous Months Of Rise