இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வங்கி ஐபிஓ.. பந்தன் வங்கி அசத்தல்..!

வருகின்ற 2018 மார்ச் 15-ம் தேதி பந்தன் வங்கி 4,473 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ-ஐ வெளியிட முடிவு செய்துள்ளது. உள்ளூர் தனியார் வங்கி நிறுவனங்கள் பெற்றதில் மிகப் பெரிய முதலீடாக இது இருக்கும்.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பந்தன் வங்கி 119.3 மில்லியன் பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.

விலை

பந்தன் வங்கி ஐபிஓ-ல் வெளியிட இருக்கும் பங்குகளின் தொடக்க விலை 370 ரூபாய் முதல் 375 ரூபாய் இருக்கும் என்று வியாழக்கிழமை தொகுப்பேட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

எத்தனை நாட்கள்

2018 மார்ச் 15-ம் தேதி துவங்கப்படும் ஐபிஓ விற்பனையானது தொடர்ந்து 4 நட்கள் என 2018 மார்ச் 19 வரை நடைபெறும் என்றும் 97.7 மில்லியன் புதிய பங்குகள் வரை விற்பனையாககும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வங்கி

உலக வங்கியின் துணை நிறுவனமான இண்டர்னேஷனல் ஃபினாஸ் கார்ப் நிறுவனம் 21.6 மில்லியன் பங்குகளை வாங்க வாய்ப்புள்ளது.

பந்தன் வங்கி

பந்தன் ஃபினான்ஷியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பந்தன் வங்கி 2015-ம் ஆண்டு முதல் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பந்தன் வங்கியைத் துவங்க ஆர்பிஐ 2014-ம் ஆண்டு அனுமதி அளித்தது.

ஐபிஓ-ஐ நிர்வகிப்பவர்கள்

பந்தன் வங்கியின் ஐபிஓ வெளியீட்டினை கோடாக் மகேந்திரா கேப்பிட்டல், ஆக்சிஸ் கேப்பிட்டல், கோல்டுமேன் சாச்ஸ், ஜேஎம் ஃபினான்ஷியல் மற்றும் ஜேபி மார்கன் உள்ளிட்ட வங்கிகள் நிர்வகிக்க உள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Bandhan Bank to launch India's biggest ever bank IPO on March 15