புதிய சட்டத்தால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சிக்கல்.. வீடு வாங்கியவர்களின் கையில் ஆதிக்கம்..!

ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பொதுவாகவே அதிகளவிலான வங்கிக் கடனில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிலையில் சில முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள காரணத்தால் கடன் கொடுத்த வங்கிகள் இந்நிறுவனங்களைத் திவாலாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.

இத்தகையை நிலையில் திவாலாக அறிவிக்கப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வீடு வாங்கியவர்களின் நிலை என்ன..?

3 முக்கிய நிறுவனங்கள்

ஐடிபிஐ வங்கி ஜேபி இன்போடெக் நிறுவனத்தையும், பாங்க் ஆப் பரோடா அமரபள்ளி நிறுவனத்தையும், பிற வங்கிகள் இணைந்து யூனிடெக் நிறுவனத்தையும் திவாலாக அறிவிக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் முறையிட்டுள்ளது.

நீதிமன்றம்

இந்நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடனைத் திருப்பி அளிக்காத காரணத்தால் வங்கிகள் இந்த முடிவிற்கு வந்துள்ளது.

இதன் பின்பு பலகட்ட விசாரணை முடிந்த பின்பு கார்பரேட் விவகார துறை அமைச்சகம் தற்போது இந்நிறுவனங்களைத் திவாலாக அறிவிக்க நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

 

14 பேர் கொண்ட குழு

இந்நிறுவனங்களை ஆய்வு செய்யவும் IBC சட்டத்திட்டன் படி எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

வீடு வாங்கியவர்கள்

தற்போது ஜேபி இன்பராடெக் மற்றும் அமரபள்ளி ஆகிய நிறுவனங்கள் குறித்து ஆய்வில் 14 பேர் கொண்ட குழு கொடுத்த பரிந்துரைகள் ஒப்புதல் பெற்றால்.

இந்த நிறுவனத்திற்கான கடன் தீர்மானம் எடுக்கும் போது இந்த நிறுவனங்களில் வீடு வாங்கியவர்கள் கடன் கொடுத்தவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களும் தீர்மான குழுவில் இடம்பெறுவார்கள் எனக் கார்பரேட் விவகார துறை செயலாளர் இன்ஜித் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.

 

ஆதிக்கம்

தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளதின் பிடி இந்நிறுவனங்களில் வீடு வாங்கியவர்கள் பாதுகாப்பற்ற கடன் வழங்கியவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களைத் தீர்மான முடிவை எடுக்கும் குழுவில் இணைப்பதில் நிறுவன பங்குதாரர்களும் ஒப்புதல் அளிப்பார்களா இல்லையா என்பது இனிமேல் தான் தெரியும்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இதுவரை ஜேபி இன்பராடெக் நிறுவனத்தில் வீடு வாங்கிய 31,000 பேரும், அமரபள்ளி சிலிக்கான் சிட்டி திட்டத்தில் வீடு வாங்கிய 41,000 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இந்நிறுவனத்திற்கான தீர்மான குழுவில் இணைத்தால், இவர்களின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Have a great day!
Read more...

English Summary

Cheer for Homebuyers: Jaypee Inftratech, Unitech and Amrapali on Risk