பாரத் டைனமிக்ஸ் ஐபிஓ.. முதல் நாளில் 0.32 முறை அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது!

பாரத் டைனமிக்ஸின் 960 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில் முதல் நாளில் மட்டும் 0.32 மடங்கு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்திய ராணுவத்திற்கு ஏவுகணை குண்டுகள், பீரங்கிகள் போன்றவற்றைத் தயாரித்து அளிக்கும் பொதுத் துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் 2.24 கோடி பங்குகளை வெளியிட்டு 73 லட்சத்திற்கும் அதிகமானவற்றை ஒரே நாளில் விற்பனை செய்துள்ளது.

பாரத் டைனமிக்ஸின் 12.25 சதவீத பங்குகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் ஒரு பங்கின் விலை 413 முதல் 428 ரூபாய் வரை விற்பனை விலையாக ஐபிஓ-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2018 ஜனவரி 31 தேதி வரையில் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திற்கு 10,543 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் உள்ளது.

தகுதி பெற்ற நிறுவன முதலீட்டாளர்கள்: 0.50 மடங்கு
நிறுவன அல்லாது முதலீட்டாளர்கள்: 0.02 முறை
சில்லறை முதலீட்டாளர்கள்: 0.21 முறை
ஊழியர்கள்: 0.08 முறை
ஒட்டுமொத்த: 1.32 முறை

Have a great day!
Read more...

English Summary

Bharat Dynamics IPO Subscribed 0.32 Times On First Day Of Bidding