1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..!

வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் டிஜிட்டல் சேவையைப் பெரிய அளவில் கொண்டு வர மோடி அரசு பெரிய அளவில் திட்டமிட்டு வரும் நிலையில், வங்கித்துறையில் அடிப்படை பாதுகாப்பே இல்லாமல் மோசடி நடந்து வருகிறது.

மோசடி

2017ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இண்டர்நெட் பேங்கிங் தொடர்பாகச் சுமார் 1,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாகச் சுமார் 71.48 கோடி ரூபாய் அளவிலான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

 

வழக்குகள் குறைந்தது

2016ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 1,785 ஆகவும், அதன் சராசரி மோசடி தொகை 1 லட்சம் ரூபாய் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் மட்டும்

மேலும் 2017 டிசம்பர் மாதம் மட்டும் சுமார் 187 வழக்குகளின் மூலம் சுமார் 33.73 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஐடி மற்றும் எலக்ட்ரானிக் துறை அமைச்சர் கே.ஜே அல்போன்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிஓஎஸ்

மேலும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இருக்கும் கார்டு ஸ்வைப் மெஷின் மூலம் சுமார் 3.46 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது இதில் 0.009 சதவீதம் தொகை மட்டுமே இதன் வாயிலாக மோசடி செய்யப்பட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Over 1,700 card, net banking-related frauds reported in 2017 - Tamil Goodreturns | 1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்