தங்கம் இறக்குமதி செய்ய ஆக்சிஸ் வங்கிக்கு தடை..!

2018-19ஆம் நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் துவங்கிய நிலையில், இந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வெளிநாட்டில் இருந்து செய்ய வங்கிகளுக்கு உரிமை வழங்க ஆய்வுப் பணிகளை துவங்கியது.

ஆய்வின் முடிவில் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்த பட்டியலில் ஆக்சிஸ் வங்கி இடம்பெறவில்லை, இதன் மூலம் இந்த வருடம் ஆக்சிஸ் வங்கியால் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய முடியாது.

காரணம்

இந்தியாவில் அதிகளவில் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்யும் வங்கியான ஆக்சிஸ் வங்கி இப்பட்டியலில் இருந்து இடம்பெறாதது அதிர்ச்சியை அளிக்கிறது.

மேலும் ஆக்சிஸ் வங்கிக்கு உரிமை வழங்காதது குறித்த காரணங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.

 

ஒப்புதல்

ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட உரிமம் பெற்ற வங்கி பட்டியலில் பாங்க் ஆப் பரோடா, எச்டிஎப்சி வங்கி, பாங்க் ஆப் நோவா ஸ்கோடியா உட்பட மொத்தம் 16 வங்கிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மறுப்பு

ஆக்சிஸ் வங்கியை போல் கருர் வைஸ்யா வங்கி மற்றும் செளத் இந்தியன் வங்கி ஆகிய இரு வங்கிகளும் தங்கத்தை இறக்குமதி செய்ய இந்த வருடம் உரிமம் பெறவில்லை.

11 கோடி டன் தங்கம்

இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..?

Read more about: axis bank rbi bullion gold

Have a great day!
Read more...

English Summary

RBI drops Axis Bank from list of bullion importers