716 லட்சம் ஹெக்டேர் நிலத்திற்கு சொந்தக்காரர் இவர்தான்..!

மனிதன் இன்றைய நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு பல வகையில் மாறியிருந்தாலும் சில குணங்களில் இன்னும் மாறவில்லை. ஆம் இன்றும் ஆண், பெண் பேதமின்றி மண் மீதும், பொன் மீது ஆசை இல்லாதவர்களை நாம் பார்க்க முடியாது.

இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், தோராயமாக உலகின் 23 சதவீத நிலத்தை ஒரு சில நபர்களிடம் மட்டுமே இருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா.? ஆனால் அதுதான் உண்மை.

அவ்வாறாக உலகில் அதிக நிலம் கொண்ட உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் பற்றித் தெரிந்துகொள்ள யாருக்குத் தான் ஆசை இருக்காது. (குறிப்பு: ஒரு ஹெக்டேர்=2.471 ஏக்கர்)

பிரெட் ஃ ப்லேண்டி

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில்லறை வணிகம் செய்யும் தொழிலதிபரான இவரின் வசம் 34 லட்சம் ஹெக்டேர் அளவு நிலம் வைத்துள்ளார். மேலும் சிறிது காலத்திற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள வால்ஹலோ கால்நடை நிலையத்தை 770 லட்சம் டாலர் கொடுத்து வாங்கி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

புரூக் குடும்பம்

டேவிட் புரூக் மற்றும் குடும்பத்தினர் கிட்டத்தட்ட தைவான் நாட்டிற்கு இணையான அதாவது 35 லட்சம் ஹெக்டேர் அளவு நிலம் கொண்டுள்ளனர். இவர்கள் தெற்கு குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் பண்ணைகள் வைத்துள்ளனர்.

மேக்குரி குழுமத்தின் பங்குதாரர்கள்

செம்மறி ஆடு மற்றும் கால்நடை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேக்குரி குழுமத்தின் பரேவே பாஸ்டோரல் கம்பெனி 44 லட்சம் ஹெக்டேர் நில அளவைக் கொண்டு இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

கைய் ஹேண்ட்ஸ் மற்றும் பங்குதாரர்கள்

பிரிட்டிஷ் முதலீட்டாளர் கை ஹேண்ட்ஸிற்குச் சொந்தமான டெர்ரா ஃபிர்மா கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த பாஸ்டோரால் கம்பெனி ஆஸ்திரேலியாவில் 57 லட்சம் ஹெக்டேர் நிலத்தைக் கொண்டு பட்டியலில் 7வது இடத்தில உள்ளது. எப்பொழுதும் 375,000 கால்நடைகளைக் கொண்டுள்ள இவர்கள் தான் ஆஸ்திரேலியாவின் அதிகமான மாட்டிறைச்சி தயாரிப்பாளர்.

மேக்லாக்லான் குடும்பம்

1888ஆம் ஆண்டில் அடிலெய்டில் ஹெச்.பி மாக்லாக்லான் என்பவரால் உருவாக்கப்பட்ட ஜம்பக் பாஸ்டல் நிறுவனம் ஆஸ்திரேலியா நாட்டில் 57.5 லட்சம் ஹெக்டேர் நிலத்தைத் தன்வசம் கொண்டுள்ளது, இவர்கள் தான் ஆஸ்திரேலியா நாட்டின் முன்னணி கம்பளி சப்ளையர் ஆவார்கள்.

ஜோ லூயிஸ் மற்றும் பங்குதாரர்கள்

70 லட்சம் ஹெக்டேர். பிரிட்டிஷ் நாட்டின் ஜாம்பவான் ஜோ லூயிஸ் 1824 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியன் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக உள்ளார். லூயிஸ் மற்றும் நிறுவனத்தின் பங்குதாரர்கள் அயர்லாந்தின் நாட்டின் நிலப்பகுதிக்கு இணையான நிலத்தை, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் வடக்குப் பகுதியில் 70 லட்சம் ஹெக்டேர் அளவிலான நிலத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சோங்டிங் பால் பண்ணை மற்றும் செவர்னி ஃபர் பங்குதாரர்கள்

சீன நாட்டின் முடான்ஜியாங் சிட்டி மெகா ஃபார்ம் நிறுவனமானது சீனாவின் ஜொங்க்டிங் பால் பண்ணை மற்றும் ரஷ்யாவின் செவர்னி ஃபர் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படும் நிறுவனமாகும். இதன் அளவானது சுமார் 91 லட்சம் ஹெக்டேர், இந்நிலத்தில் 100,000 பசுக்கள் கொண்ட உலகன் மிகப்பெரிய பண்ணை அமைந்துள்ளது.

கினா ரினார்ட்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் செல்வந்தரான கினா ரினார்ட், உலகின் மிகப்பெரும் நில உரிமையாளரான எஸ். கிட்மேன் & கோ நிறுவனத்திடம் இருந்த நிலம் மற்றும் 21 பரந்த கால்நடை பண்ணைகளை வாங்கியதன் மூலம், 120 லட்சம் ஹெக்டேர் அளவு நிலத்தைக் கொண்டு உலகின் அதிக நிலம் கொண்ட டாப் 10 பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இன்யூட் பீப்புள் ஆப் நுனாவுட்

இந்த அமைப்பு கனடாவின் மத்திய மற்றும் கிழக்கு, வடமேற்கு பகுதிகளில் சுமார் 350 லட்சம் ஹெக்டேர் அளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பிற்கு 1993 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்பு இதை நிர்வகிக்க 1999 இல் டெரிடரி ஆப் ஆப் நுனாவுட் உருவாக்கப்பட்டது.

தி கத்தோலிக் சர்ச்

உலகின் பெரும்பகுதி, பிரான்ஸ் நாட்டை விடப் பெரிய பகுதி, கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமானது, இதன் மூலம் உலகளவில் அதிகமான நிலப்பகுதியைக் கொண்ட மிகப்பெரிய அரசு சாராத அமைப்பாகக் கத்தோலிக்கத் திருச்சபை இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியா மற்றும் ஜேர்மனி உள்படப் பரந்த நிலங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். மொத்தமாக 716 லட்சம் ஹெக்டேர் அளவு நிலத்தைக் கொண்டு பட்டியலில் முதல் இடத்தை (நிரந்தரமாக) பிடித்துள்ளனர்.

Read more about: land real estate landlord money

Have a great day!
Read more...

English Summary

Who owns the most land in the world? surprising facts