அட்சய திரிதியையில் தங்கம் வாங்குகிறீர்களா? இதப்படிங்க முதல்ல..!

அட்சய திரிதியை நாள் இந்தியாவில் தங்கம் வாங்க மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த மஞ்சள் உலோகம் இந்தியர்களின் உணர்வுகளோடு கலந்த ஒன்று. ஆனால் நாம் எப்போதும் தங்கத்தின் விலை பற்றியோ அல்லது அதன் தூய்மை பற்றிய பல்வேறு காரணிகள் குறித்தோ நகைக் கடைகளில் கேள்வி எழுப்புவதே இல்லை. எனவே நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் முன்பு, பின்வரும் விசயங்களைக் கவனத்தில் கொள்வதன் மூலம் ஸ்மார்டாகத் தங்கம் வாங்குபவராக மாறிவிடலாம்.

தங்கத்தின் தூய்மை

தங்க நகைகள் காரட்களில் (Karat-KT) விற்கப்படுகிறது. கேரட் (carat) என்ற வார்த்தையுடன் குழம்பிவிட வேண்டும். இது வைரங்களின் எடையைக் குறிக்கப் பயன்படுகிறது.

24காரட் என்பது தங்கத்தின் மிகத் தூய்மையான வடிவம். இந்த உலோகத்தை நகையாக மாற்ற மிக மென்மையாக இருக்கும். நகைக்கடைகளில் விற்கப்படும் தங்கம் 22காரட் அல்லது அதற்கும் குறைவே.22காரட் தங்கம் தான் நகையாக வடிவமைக்கச் சரியாக இருக்கும்.

எளிதாகச் சொல்லவேண்டும் என்றால், தங்க நகையை 24 பகுதிகளாகப் பிரிக்கும் போது 22 காரட் தங்க நகையில் , 24ல் 22 பகுதி தங்கமாகவும், மீதி இரண்டு ஜிங்க், காப்பர், கேட்மியம் அல்லது சில்வரில் ஏதேனும் ஒன்றில் இருக்கும். இவை தான் தங்கநகையின் நிறத்தை தீர்மாணிக்கின்றன. இப்படித் தான் வெள்ளை அல்லது ரோஸ் தங்கமாகக் கிடைக்கிறது. சில சமயங்களில் 22காரட் தங்கம் மிகவும் மர நிறத்தில் இருக்கும். அதற்குக் காரணம் காப்பர் தான்.

 

ஹால்மார்க் தங்கம்

சாதாரண மனிதனால் தங்கம் 22காரட்டா அல்லது 18காரட்டா என்பதைக் கண்டறிய முடியாதல்லவா. அதற்காகத் தான் இந்தியாவில் தங்கத்தின் தரத்தை நிலைப்படுத்தவும், அடையாளங்காணவும் ஹால்மார்க் முத்திரை பயன்படுகிறது. இந்திய தரநிர்ணய ஆணையத்தின்(The Bureauof Indian Standards' - BIS) ஹால்மார்க் முத்திரையின் மூலம் நீங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை எளிதில் அறியலாம். இந்தப் பி.எஸ்.ஐ முத்திரையில் காரட் மற்றும் தங்கம் ஹால்மார்க் பெற்ற வருடம் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.ஆண்டு ஆங்கில எழுத்திலும் காரட் அதற்கு முன்பும் இருக்கும். 22K916 என்பது 22காரட் தங்கத்தையும், 18K750 என்பது 18காரட் தங்கத்தையும் குறிக்கும்.

விலை

இரண்டு முக்கியக் காரணிகளை வைத்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒன்று காரட், மற்றொன்று நகையில் சேர்க்கப்படும் உலோகத்தின் வகை.

தங்க நகையின் கடைசி விலை

தங்கத்தின் எடைக்குத் தகுந்த விலை+ செய்கூலி + ஜி.எஸ்.டி. நீங்கள் தங்கம் வாங்குவதற்கு முன் இணையதளம் அல்லது செய்தித்தாள் வாயிலாக விலை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.

செய கூலியை பொறுத்தவரையில், இந்தியாவில் அது இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. நிறைய நகை விற்பனையாளர்கள் செய்கூலியின் மீது தள்ளுபடி தருகின்றனர். எனவே டிசைனை மட்டுமில்லாமல் அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

மற்றொரு கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விசயம், கற்கள் பதிக்கப்பட்ட நகைகள். நகையை எடை போடும் போது கற்களின் எடையையும் சேர்த்து தங்கத்தின் விலையைச் சொல்கிறார்களா எனக் கவனிக்க வேண்டும். அதேபோல் நகையை விற்கும் போதும், கற்களின் சரியான எடையைக் கழித்துத் தங்கத்தின் உண்மையான எடைக்கு ஈடான பணத்தைப் பெறவேண்டும். ஏனெனில் நகையின் மதிப்பானது, மொத்த எடையில் வைரம் உள்பட அனைத்து கற்களின் எடையை நீக்கி கணக்கிடப்படுகிறது. பில் போடும் போது, நீங்கள் வாங்கும் நகையின் மதிப்பை நகை, கற்களின் மதிப்பு, செய்கூலி, ஜி.எஸ்.டி எனப் பிரித்துப் போடுமாறு நகை விற்பனையாளரிடம் கூறுங்கள்.

 

தங்கத்தை வாங்கும் வழிகள்

தங்கத்தை நகைக்கடைகளில் மட்டுமே வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கூடத் தங்க நாணயங்களாக வாங்கலாம். எம்.எம்.டி.சி அதற்குச் சிறந்த உதாரணம். இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தங்கம் மற்றும் வெள்ளியை விற்கும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். எஸ்.பி.ஐ போன்ற வங்கிகளில் கூட 2 கிராமுக்கு குறைவான தங்கக்காசுகளை வாங்கலாம்.

நீங்கள் நகையாக மட்டுமே வாங்கவேண்டும் என்றால், இணையத்தில் நகைகளை விற்கும் ஏராளமான விற்மனையாளர்கள் உள்ளனர். இவை பெரும்பாலும் தனியார்த்துறை நகை வடிவமைப்பாளர்கள். தங்கத்தை வாங்கும் முன் விற்பனையாளரின் நம்பகத்தன்மையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

Have a great day!
Read more...

English Summary

How to Buy Gold in India on Akshaya Tritiya?