100 பில்லியன் டாலருக்கு மிகப்பெரிய திட்டம்.. சியோமி அதிரடி..!

ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்குக் கடந்த சில வருடங்களாகக் கடுமையான போட்டியை அளித்து வரும் சியோமி பங்குச்சந்தையில் இறங்கியுள்ளது.

இந்நிறுவனம் ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக ஐபிஓ விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது.

100 பில்லியன் டாலர்

அடுத்த மாதத்தில் பங்குச்சந்தையில் களமிறங்கும் இந்நிறுவனம் சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பில் பங்குகளைப் பொதுச் சந்தைக்கு வெளியிட உள்ளது.

ஆனால் மதிப்பு குறித்த அறிவிப்புகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அலிபாபா

சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா 2014ஆம் ஆண்டில் சுமார் 25 பில்லியன் டாலர் மதிப்பில் பங்குச்சந்தையில் களமிறங்கியது.

சியோமி

இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பாக 45 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டது. இக்காலகட்டத்தில் சியோமி இந்தியாவில் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து பெரிய அளவிலான வெற்றியை பெற்றது.

ஐபிஓ

மேலும் சியோமி தனது ஐபிஓ-விற்காக மோர்கன் ஸ்டான்லி, கோல்டுமேன் சேச்சஸ், கிரெடிட் சூசி, டாச்சீஸ் வங்கி ஆகியவற்றை நியமித்துள்ளது.

சீன நிறுவனம்..!

மோடியின் பிரச்சனையைத் தீர்க்க வரும் சீன நிறுவனம்..!

மீண்டும் ஒரு புரட்சி

சாம்சங், எல்ஜி நிறுவனங்களை ஓடஓட விரட்டும் சியோமி.. மீண்டும் ஒரு புரட்சி..!

ஓடஓட விரட்டும்

சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களை ஓடஓட விரட்டும் 'சியோமி'..!

Have a great day!
Read more...

English Summary

Xiaomi planning biggest ever IPO at $100 billion