அக்‌ஷய திரிதியை முன்னிட்டு சலுகையை வாரி வழங்கும் நகை கடைகள்..!

அக்‌ஷய திரிதியை முன்னிட்டு இந்துக்கள் பெரும் அளவில் தங்கம் வாங்குவார்கள் என்பதாலும், அக்‌ஷய திருதியின் போது தங்கம் வாங்கினால் செல்வம் பெரும் என்பதாலும் நகை கடைகள் பல சலுகைகளைத் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கி வருகிறன.

இன்று (18/04/2018) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,992 ரூபாய் என்றும், சவரன் (8 கிராம்) தங்க நகை விலை 23,936 ரூபாய் எனவும் விப்ரனை செய்யப்பட்டு வரும் நிலையில் நகை கடைகள் வழங்கி உள்ள சலுகைகள் பற்றி இங்குப் பார்க்கலாம்.

தனிஷ்க் ஜூவல்லர்ஸ்
தனிஷ்க் ஜூவல்லர்ஸ்

தனிஷ்க் ஜூவல்லர்ஸ் ‘மங்கலம்" சலுகையின் கீழ் செய்கூலியில் 25% சலுகையினை அளித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் வைர நகை வாங்கும் போது பல டிஸ்கவுட்களையும் வழங்கி வருகிறது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்

அக்‌ஷய திருதியை முன்னிட்டு மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனமானது ஏப்ரல் 1 முதல் 25 வரை 15,000 ரூபாய்க்கும் அதிகமாக நகை வாங்குபவர்களுக்குத் தங்க நாணயம் மற்றும் 5% கிப்ட் கார்டு ஒன்றும் அளித்து வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ்
சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ்-ல் அக்‌ஷய திரிதியை முன்னிட்டுத் தங்கம் நகை வாங்குபவர்களுக்குச் சவரனுக்கு 1,000 ரூபாய் வரை சலுகை அளிக்கப்படுகிறது.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அக்‌ஷய திருதியின் போது தங்கம் வாங்கும் போது கிராமுக்கு 50 ரூபாயும், வைர நகை வாங்கும் போது 15 சதவீதம் வரையும் சலுகை அளிக்கப்படுகிறது.

ஏவிஆர் ஜூவல்லர்ஸ்
ஏவிஆர் ஜூவல்லர்ஸ்

ஏவிஆர் ஜூவல்லர்ஸ் அக்‌ஷய திரிதியை முன்னிட்டு தங்க நகை வாங்கும் போது அதன் இடைக்கு இணையான வெள்ளி நகையை இலவசமாக அளிக்கிறது. மேலும் வைர நகைகளுக்கு 20% வரை சலுகை அளிக்கிறது.

போன்பே செயலி
போன்பே செயலி

பிளிப்கார்ட்டின் போன்பே செயலியிலும் 24 காரட் தங்கத்தினை டிஜிட்டல் முறையிலும், தங்க நாணயமாகவும் வாங்க முடியும்.

பேடிஎம்
பேடிஎம்

பேடிஎம்-ல் 24 காரட் தங்கம் வங்கினால் ஜிஸ்டி 3 சதவீதத்திற்கும் "ZEROGST" கூப்பனை பயன்படுத்தித் தங்கம் பெற முடியும். ஏசி, டிவி, பிரிட்ஜ் வாங்கினால் 10,000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர்.

பிசி ஜூவல்லர்ஸ்
பிசி ஜூவல்லர்ஸ்

பிசி ஜூவல்லர்ஸ் அக்‌ஷய திருதியின் போது தங்கம் நாணயம் வாங்கும் போது 7% டிஸ்கவுண்ட் அளிக்கிறது. இந்த ஆஃபர் இணையதளத்தில் மட்டும் ஆகும்.

Have a great day!
Read more...

English Summary

Akshaya Tritiya 2018: Here Are The Best Offers On Gold, Diamond Jewellery in TamilNadu