யூடியூப்-இல் அதிகப் பணம் சம்பாதிக்கச் சூப்பரான டிப்ஸ்..!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் யூடியூப் மூலம் பணம் சம்பாரிக்கப் பல இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இது எளிதல்ல.. ஏன் என்றால் இதில் பல நுணுக்கங்களைக் கையாளவேண்டும். நீங்கள் எந்தத் துறை சார்ந்த விஷயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள், எந்த மொழியில் உங்கள் வீடியோவை உருவாக்கியுள்ளீர்கள், உங்கள் தலைப்பு எந்த அளவுக்கு அனைத்துத் தரப்பு மக்களையும் சென்று அடையக்கூடிய அளவிற்குத் தகுதியானது எனக் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளன.

இப்போது நீங்கள் ஒரு வீடியோவை தமிழ் மொழியில் உருவாக்கினால் அது தமிழ் மொழியில் யூடியூப் வீடியோ பார்ப்பவர்களை மட்டுமே சென்றடையும். அதுவே ஆங்கிலத்தில் ஒரு வீடியோவை பதிவு ஏற்றினால் அது சென்றடையும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

நீங்கள் பதிவிடும் வீடியோவை எந்த அளவுக்கு உலகமயமாக இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் உங்களுக்கு யூடியூப்-இல் இருந்து அதிகப் பணம் மற்றும் விளம்பரங்கள் தரப்படும். நீங்கள் பேசும் தலைப்பு அரசாங்கத்தை விமர்சித்தாலோ அல்லது தடைசெய்யப்பட்ட விஷயங்கள் பற்றிதாக இருந்தால் உங்களுக்கு யூட்யூப் மூலம் விளம்பரங்கள் கிடைக்காது இதனால் உங்கள் வருமானம் பாதிக்கும்.

மேலும் இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளக் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

Have a great day!
Read more...

English Summary

Tips to earn more money from youtube