உங்களின் ஆதார் விபரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது.. கண்டறிவது எப்படி?

மக்கள் தங்களின் ஆதார் விபரங்களின் மீது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனெனில் நம் அணைத்து விபரங்களும் ஆதார்-இல் உள்ளடக்கப்பட்டுவிட்டது. அதனால் நமக்குத் தெரியாமல் வேறு யாரும் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தக் கூடாது மற்றும் அதை நாம் எங்கெங்கு ஆதார்-ஐ உபயோகப் படுத்தியுள்ளோம் என்று நினைவில் வைக்க வேண்டும்.

இதற்கு ஆதார் ஆணையம் ஒரு சிறப்பான சேவையை அறிமுகச் செய்துள்ளது, ஆதார் உபயோகித்த வரலாறு (Aadhaar Authentication History). இந்தச் சேவை மூலம் நமது ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை நமக்குத் தெரியாமல் யாரும் பயன்படுத்த முடியாது படி பாதுகாத்துக் கொள்ளலாம்.

இதைத் தெரிந்து கொள்ள uidai.gov.in என்ற தளத்திற்குச் சென்று உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து, கால அளவைக் குறிப்பிட்டு எங்கெங்கே உங்கள் ஆதார் விபரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை காணுங்கள்.

Have a great day!
Read more...

English Summary

How to Check Aadhaar Authentication History Online?