அசிங்கப்பட்டால் தான் வெற்றிப்பெற வேண்டும் என்ற வெறி வரும்.. இதற்கு லம்போர்கினி சிறந்த உதாரணம்..!

லம்போர்கினி நிறுவனரான ஃபெருசியோ லம்போர்கினி ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குச் சிறு வயதில் இருந்தே மெக்கானிக்கல் துறையில் ஆர்வம் அதிகம். இவர் தனது சொந்த முயற்சியில் ஒரு டிராக்டர் நிறுவனத்தை முதலில் உருவாக்கினார் அதற்கு முக்கியக் கரணம் பிற விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் டிராக்டர் உற்பத்தி செய்யவே.

இவர் ஈட்டிய லாபத்தில் ஒரு ஃபெர்ராரி காரை வாங்கினார், இந்தக் காரில் கிளட்ச் பிரச்சனை அடிக்கடி வந்ததைத் தொடர்ந்து இதைப் பற்றிப் ஃபெர்ராரி-இன் தலைமை நிர்வாகியிடம் புகார் அளித்தார் ஃபெருசியோ லம்போர்கினி. இதைக் கேட்டுக் கோபம் அடைந்த என்ஃஸோ பெர்ராரி அவரை ஒரு டிராக்டர் விற்பனையாளர் அவருக்குக் காரை பற்றி ஒன்றும் தெரியாது என அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டார்.

இதை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்ட ஃபெருசியோ லம்போர்கினி தனது சொந்த கார் நிறுவனத்தை உருவாக்கினார். அதற்கு லம்போர்கினி எனப் பெயர் சூட்டினார். இதன் விற்பனையைப் ஃபெர்ராரிகார்களை விட அதிகமாக்கித் தான் எடுத்துச் சபதத்தை நிறைவேற்றினர். இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்பு லம்போர்கினி நிறுவனத்தை விற்றுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்பி விவசாயம் செய்யத் தொடங்கினர்.

இவரைப் பற்றிய முழு விபரங்களைக் கீழே உள்ள வீடியோவில் காணுங்கள்.

Have a great day!
Read more...

English Summary

Lamborghini's success story in tamil