ப்யூன்-ஆக இருந்து 1.36 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த பல்வந்த்..!

விளம்பரங்கள் மூலம் மக்களைக் கவர்ந்து அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கிய ஒரு விளம்பரம் என்றால் பெவிகால் என்பதை நாம் மறுக்க முடியாது.

ப்யூனாகப் பணியாற்றி வந்த பல்வந்த் பாரிக் பல கடினமான சூழ்நிலைகளைத் தாண்டி 1959ஆம் ஆண்டுப் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் துவங்கினார்.

குஜராத்..
குஜராத்..

மஹூவா என்னும் சிறிய டவுனில் பிறந்த பல்வந்த் பாரிக், உயர் படிப்பிற்காக மும்பை வந்தார். இவர் தேர்வு செய்தது சட்ட துறை, ஆனால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சுமார் ஒரு வருடம் சமுகப் பணிகளிலேயே பல்வந்த் இருந்தார்.

இதன்பின்பு மும்பை வந்து மீண்டும் தனது படிப்பை முடித்தார்.

 

வேலை
வேலை

சட்டப் படிப்பை முடித்த பின்பும் வழக்கறிஞராகப் பணியாற்ற அவருக்கு விருப்பமில்லை. இதனால் தினசரி வாழ்க்கை நகர்வது கூடக் கடினமாகத் துவங்கியது.

இதனால் டையிங் மற்றும் பிரின்டிங் பிரஸ் நிறுவனத்தில் முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்தார். இதன் பின்பு மர பொருட்களை வர்த்தகம் செய்யும் நிறுவனத்தில் ப்யூனாகப் பணியாற்ற துவங்கினார். இக்காலகட்டத்தில் தங்குவதற்கு இடம் இல்லாத காரணத்தால் அலுவலகத்தின் கிடங்கில் தனது மனைவியுடன் தங்கியிருந்தார்.

 

முதல் முயற்சி
முதல் முயற்சி

இப்படிக் காலம் மெல்ல நகர்ந்து வர, ஒரு முதலீட்டாளர் பல்வந்த் பாரிக் அவர்களிடம் இருக்கும் பிஸ்னஸ் செய்யும் திறனை கண்டறிந்தார். இதன் பின்பு பல்வந்த் பாரிக் சைக்கிள், ஆர்கா நட், பேப்பர் டை ஆகியவற்றை மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்தார்.

பல்வந்த் பாரிக்-இன் முதல் வர்த்தக முயற்சியில் தனது தம்பி சுஷில் பாரிக் அவர்களையும் இணைந்து கொண்டார்.

 

முதல் உற்பத்தி
முதல் உற்பத்தி

1959ஆம் ஆண்டுத் தனது தம்பியுடன் இணைந்து பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் என்னும் தொழிற்சாலையைத் துவங்கினார் பல்வந்த். இந்தத் தொழிற்சாலையின் முதல் தயாரிப்பு தான் பெவிகால்.

வெற்றி
வெற்றி

பெவிகால் இந்திய மக்கள் மத்தியில் பெரிய அளவிலான நம்பிக்கையை வளர்த்த நிலையில், இதன் விற்பனை இந்தியா முழுவதும் அமோகமாக இருந்தது. இதன் வாயிலாக இந்திய பசை வர்த்தகப் பிரிவில் ஆதிக்கத்தைச் செலுத்தியது பிடிலைட்.

ராகெட் வேகம்
ராகெட் வேகம்

பெவிகால் பசையின் வெற்றிக்கு, இந்நிறுவனம் தயாரித்த சிறப்பான விளம்பரங்கள் தான். இந்த விளம்பரங்கள் சாதாரண எளிய மக்களையும் ஈர்க்கும் வகையில் இருந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் விற்பனை சிறப்பாக இருந்தது.

அடுத்தத் தயாரிப்பு
அடுத்தத் தயாரிப்பு

பெவிகால் வெற்றியைத் தொடர்ந்து பெவிகுவிக் மற்றும் எம்சீல் ஆகியவற்றைத் தயாரித்த பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ், அதிலும் சிறப்பான வர்த்தகத்தைப் பதிவு செய்த நிலையில் சுமார் 70 சதவீத சந்தையைக் கைப்பற்றியது அசத்துகிறது.

விரிவாக்கம்
விரிவாக்கம்

2006ஆம் ஆண்டில் பெவிகால் பிராண்டை சர்வதேச சந்தைக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்னும் திட்டத்தில் இறங்கியது பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்.

இதன் பிடி அமெரிக்கா, தாய்லாந்து, துபாய், எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தொழிற்சாலையை அமைத்தது. இதுமட்டும் அல்லாமல் சிங்கப்பூரில் ஆராய்ச்சி மையத்தையும் துவங்கினார் பல்வந்த்.

 

நன்கொடை மற்றும் சமுகச் சேவை
நன்கொடை மற்றும் சமுகச் சேவை

பல்வந்த் பாரிக் தான் பிறந்த மஹூவா-வில் 2 பள்ளிகள்ஷ கல்லூரி, மருத்துவமனை ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். இதுமட்டும் அல்லாமல் பல நன்கொடை அளித்து வருகிறார்.

இதேபோல் குஜராத் மாநிலத்தின் கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காகத் தர்ஷக் பவுண்டேஷன் என்னும் என்ஜிஓ அமைப்பையும் உருவாக்கியுள்ளார் பல்வந்த் பாரிக்.

 

1.36 பில்லியன் டாலர்
1.36 பில்லியன் டாலர்

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான பல்வந்த் பாரிக் சுமார் 1.36 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு போர்ப்ஸ் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 45வது இடத்தில் உள்ளார்.

2013இல் மறைந்தார்
2013இல் மறைந்தார்

5,000 கோடி வருமானம், 450 கோடி லாபம், 4,978 ஊழியர்கள் எனப் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜியத்தை உருவாக்கிய பல்வந்த் பாரிக் 2013இல் தனது 88 வயதில் மறைந்தார்.

வீடியோ
வீடியோ

வீடியோ

Have a great day!
Read more...

English Summary

Amazing story of India's Fevicol Man, From peon to building $1.36B empire