உஷார்.. 200 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியாத அபாயம்..!

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு 200 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் அந்த நோட்டுகள் கிழிந்தால் அல்லது அழுக்கானால் வங்கிகளில் மற்ற முடியாத நிலையில் தான் உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி விதிகள் பிரிவு 28-ன் கீழ் கிழிந்த மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி வழங்கப்படுகிறது.

எந்த ரூபாய் நோட்டுகளை எல்லாம் மாற்ற முடியும்.

ஆர்பிஐ விதிகளின் கீழ் ரூ. 5, ரூ. 10, ரூ. 50, ரூ. 100, ரூ. 500, ரூ. 1,000, ரூ. 5,000 மற்றும் 10,000 ரூபாய் நொட்டுகள் கிழிந்தால், சேதம் அடைந்தால் மாற்றி அளிக்க முடியும்.

புதிய ரூபாய் நோட்டுகளுக்குச் சிக்கல்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2,000 ரூபாய் மற்றும் 2017 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளை அந்த விதிகளின் கீழ் இதுவரை கொண்டுவரப்படவில்லை.

புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள்

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் படி நாடு முழுவது 6.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நொட்டுகள் புழக்கத்தில் உள்ளது. அதே நேரம் புதிதாக 2,000 ரூபாய் நொட்டுகளை அச்சிடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஏப்ரல் 17-ம் தேதி தெரிவித்துள்ளனர்.

வங்கி அதிகாரிகள்

வங்கி அதிகாரிகள் இது வரை 2,000 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளைக் கிழிந்து அல்லது அழுக்காக உள்ள போது மாற்றித் தர விதிகள் வகுக்கப்படவில்லை என்றாலும் ஆர்பிஐ விதி பிர்வு 28-ன் கீழ் விரைவில் இரண்டு மதிப்பிலான நோட்டுகளைச் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆர்பிஐ உறுதி

மத்திய வங்கி நிதி அமைச்சகத்திற்கு 2017-ம் ஆண்டே இது குறித்து வழியுறுத்தி உள்ள நிலையில் அரசு இது குறித்துப் பெரிதாகக் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது. ஆர்பிஐ சட்ட விதி பிரிவு 28 கீழ் "தொலைந்து போன ரூபாய் நோட்டுகள், காணாமல் போன ரூபாய் நோட்டுகள், சிதைந்த ரூபாய் நோட்டுகள் அல்லது குறையுள்ள ரூபாய் நோட்டுகள்" போன்றவை எல்லாம் வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது இருக்கும் விதிகளின் படி 200 மற்றும் 2,000 ரூபாய் நொட்டுகள் கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியாது என்பதை உறுதி செய்துள்ளது.

 

மத்திய அரசு

மத்திய அரசு இது குறித்து ஏன் நீண்ட காலமாக முடிவுகளை எடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் ஏதும் தெரியவில்லை. நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மத்திய அரசு ரூபாய் நோட்டுகளை மாற்றி அளிப்பதற்கான விதிமுறைகள் குறித்த தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று மட்டும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.

Have a great day!
Read more...

English Summary

Soiled or imperfect Rs 200, Rs 2000 notes stuck in exchange counter