சென்னை பையன்.. தோனிக்கு போட்டி.. விடா முயற்சி.. புதிய அவதாரம் எடுக்கும் தினேஷ் கார்த்திக்!

ஜூன் 1,1985 சென்னையில் பிறந்தார் தினேஷ் கார்த்திக். தனது 10 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டார். அவரது தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் தினேஷ் கார்த்திக்கிற்கு மேலும் பலம் சேர்த்து. 1999-ல் முதல் முதலாகத் தமிழ்நாடு அண்டர்-14 அணிக்காகக் களமிறங்கினர், அதில் சிறப்பாக ஆடவே 2000 ஆம் ஆண்டிற்குள்ளேயே அண்டர்-19 அணிக்குத் தேர்வாகிவிட்டார். அப்போது அவருக்கு வயது 15 தான்.

முதல் சர்வதேச போட்டி

2004-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அண்டர்-19 அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் போட்டியில் லீக் மேட்சில் 39 பந்துகளில் 70 ரன்களை அடித்து இந்தியா அரையிறுதிக்குச் செல்ல வழிவகுத்தார். ஆனால் அரையிறுதியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது.

இந்திய அணி

அண்டர்-19 தொடர்ந்து 2004 இறுதிக்குள் இந்திய அணியில் இடம் கிடைத்தது அப்போதைய காலத்தில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் என இரண்டிலும் சிறந்து விளங்கினார். 2005 வரை தன்னால் முடிந்த அளவிற்கு இந்தியா அணியில் சிறப்பாகச் செயல் பட்டர்.

தோனி புயல்

2005-இல் தோனி என்னும் புது வீரர் அணிக்குள் நுழைந்தார், இதில் என்ன ஒரு ஒற்றுமை என்றால் அவரும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங்-இல் சிறப்பம்சம் கொண்டவர். இதனிடையே யாரைத் தேர்வுசெய்வது என்பது குறித்துப் பிசிசிஐ-க்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.

கங்குலி முடிவு

பிசிசிஐ தரப்பில் தினேஷ் கார்த்திகை தேர்வுசெய்ய வேண்டும் என்று கேட்டனர். ஆனால் கங்குலி தோனி மேல் தான் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தேர்வாளர்களைச் சமாதானப்படுத்தித் தோனியை அணிக்குள் சேர்த்துக்கொண்டார்.

2005-2017

இந்தக் காலகட்டத்தில் தோனி சிறப்பாகச் செய்யப்பட்டு வந்ததால் தினேஷ் கார்த்திக்கிற்குப் பெரிதாக வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. தோனிக்கோ அல்லது மத்த வீரர்கள் யாரேனும் காயம் காரணமாக விளையாட இயலாதபோது மட்டுமே இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.அதில் 6 அல்லது 7-ம் விக்கெட்டிற்குப் பிறகு தான் பேட்டிங் அட தான் வாய்ப்புக் கிடைத்தது.

சிறப்பான ஆட்டத்திற்குக் கிடைக்காத பரிசு

இந்தக் காலங்களில் இவர் விளையாடிய ஆட்டங்களில் என்ன தான் சிறப்பாகச் செயல்பட்டாலும் தோணியோ அல்லது பார்திவ் பாடேலோ விளையாடத் தகுதியாக இருந்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது. என்ன தான் சிறப்பாக விளையாடக் கூடிய வீரராக இருந்தாலும் தொடர்ந்து அணியில் விளையாடினால் தான் அந்த உத்வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

விட முயற்சி

என்ன தான் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் தினேஷ் கார்த்திக் மனம் தளராமல் டிஎன்பிஎல், ரஞ்சி கோப்பை, ஐபிஎல் என அவருக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டார், அதில் அவரின் திறமையை நிரூபித்து மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற கனவோடு செயல்பட்டார்.

ஐபிஎல்

2014 டெல்லி அணி 14 கோடி ரூபாய்க்குத் தினேஷ் கார்த்திகை ஏலம் எடுத்து அந்தச் சீசனில் அதுவே தனி ஒரு வீரருக்கான அதிக ஏல தொகை. ஆனால் அந்தச் சீசனில் சரியாக விளையாடாததால் அடுத்து வருடம் 2 கோடிக்கு மட்டுமே ஏலம் போனார். அதைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்காக விளையாடினர். தற்போது முடிந்த 2018 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாகச் சிறப்பாகச் செயல்பட்டு அந்த அணி 3-வது இடத்தில் நிறைவுசெய்தது.

நிதாஸ் ட்ராபி

சமீபத்தில் நடந்த இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு இடையே நடந்த நிதாஸ் ட்ராபி இறுதி போட்டி இந்தியா வங்க தேசத்திற்கு இடையில் நடைபெற்றது, இந்தப் போட்டியில் 8 பந்துகளில் 29 ரன்களை அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்குக் கூட்டிச்சென்றார். அந்தப் போட்டியை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது.

2019 உலகக்கோப்பை

நிதாஸ் ட்ராபி-ஐ போல் 2019 உலகக்கோப்பை அணியிலும் தினேஷ் இடம் பெற்று சிறப்பாகச் செயல்பட்டு ஒவ்வொரு தமிழனையும் பெருமைப்படச்செய்வார் என நம்பிக்கையுடன் காத்திருப்போம். மேலும் இவரைப் பற்றின உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடுங்கள்.

நான்தான்பாரஜினிகாந்த்

நான்தான்பாரஜினிகாந்த்.. எனது சொத்து மதிப்பு இவ்வளவு தான்..!

பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்..!

முகேஷ் அம்பானி திடீர் முடிவு.. பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்..!

சமையல் எரிவாயு விலை உயர்ந்தது..!

2018-ம் ஆண்டில் முதன் முறையாகச் சமையல் எரிவாயு விலை உயர்ந்தது..!

Have a great day!
Read more...

English Summary

dinesh karthik's road to success at the indian team