சீனாவின் ஐபோன் என அழைக்கப்படும் சியோமி-இன் மாபெரும் வெற்றி கதை..!!

இன்று உலகளவில் மிக முக்கியமான ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் சியோமியும் ஒன்று. சியோமியை நிறுவியவர் திரு.லெயி ஜூன், தனது படிப்பை முடிந்தவுடன் 1992ஆம் ஆண்டுக் கிங்சாப்ட் எனும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கிங்சாப்ட் நிறுவனத்தில் படி படியாக முன்னேறி அந்த நிறுவனத்திற்கே தலைவர் ஆனார்.

Advertisement

2010 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் மிகப் பிரபலம் அடைய, அதன் மீது கவனம் செலுத்த தொடங்கினார் லெயி ஜூன் அதையடுத்துக் கூகிளில் வேலைபார்த்துக் கொண்டிருந்த லின் பின் மற்றும் சில நபர்களுடன் சேர்ந்து உருவாக்கிய நிறுவனம் தான் சியோமி.

Advertisement

அதற்குப் பிறகு சியோமி நிறுவனத்தைப் பெரிய அளவில் மேம்படுத்த சீனா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் உள்ள பெரும் பணக்காரர்களிடம் இருந்து நிதி உதவி பெற்று ஏப்ரல் 6, 2010ஆம் ஆண்டுச் சியோமி அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டது.

2011ல் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சியோமி. அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளில் இதன் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்தது. இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 45 பில்லியின் டாலர்கள் ஆகும் அதுமட்டும் இல்லாமல் உலகத்தின் தலைசிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் சியோமிக்கு 8-வது இடம்.

Advertisement

மேலும் சியோமி பற்றிய தகவல்கள் அறியக் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.

English Summary

China's biggest smartphone company xiaomi success story
Advertisement