கேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..!

கேரள அரசின் கனவு திட்டமான பிரவாசி சிட்டிஸில் என்ஆர்ஐ-க்கான சிட் ஃபண்டு திட்டத்தினைக் கேரளாவின் மாநில நிதி நிறுவனத்தின் கீழ் முதலமைச்சர் பினராயி விஜயன் ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் துவங்கி வைக்க உள்ளார் என கேரள நிதி அமைச்சரான தாமஸ் ஐசாக் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன் தலைமையிலான அட்சிக்கு முன்பு இருந்த யூடிஎப் அரசின் போதே இதற்கான அனுமதி கிடைத்த உடன் தேர்தல் வந்து ஆட்சி மாறிய காரணத்தினால் தற்போது முழுப் பணிகளும் தற்போது முடிவடைந்துள்ளதாகவும் விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும் ஐசக் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம்

2018 ஜூன் 12-ம் தேதி இந்தச் சிட் ஃபண்டு திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பம் KSFE இணையதளத்தில் கிடைக்கும் என்றும், ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தவணை

இந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் மாதம் 3000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்று KSFE தலைவரான பிலிப்ஸ் தாமஸ் தெரிவித்துள்ளார்.

கால அளவு

பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் 30 மாதம் முதல் 60 மாதங்கள் வரையிலான காண்டிராக்ட் படி தான் ஊழியர்கள் பணிக்கு செல்கின்றனர். ஒருவர் இந்தச் சிட்டி திட்டத்தின் கீழ் சேர்ந்தால் அந்தச் சிட்டின் கால அளவு முடிந்த உடன் அவர்களது என்ஆர்ஓ கணக்கில் இந்தப் பணத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.

பாஸ்போர்ட் மற்றும் விசா

இந்தச் சிட் திட்டத்தில் விண்ணப்பிப்பது முதல் பணத்தினைத் திரும்பப் பெறுவது வரை அனைத்தையும் ஆன்லைன் மூலமே செய்யலாம். ஆனால் அதற்குப் பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்களையும் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.

தவணைப் பணத்தினை எப்படிச் செலுத்துவது?

சிட்டில் சேருபவர்கள் KSFE மொபைல் செயலி மூலமாகவும் பணத்தினைச் செலுத்தலாம். அதுமட்டும் இல்லாமல் இணையதளக் கேட்வே சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது.

ஏலம்

சிட்டை ஏலத்தில் எடுக்க விரும்பினாலும், ஏலத்தில் பங்கேற்க அல்லது கண்காணிக்க விரும்பினாலும் ஆன்லைன் மூலமே அனைத்து விவரங்களையும் பெறலாம்.

நாமினேஷன்

கேரளாவில் உள்ள என்ஆர்ஐ-ன் உறவினர்களைச் சிட்டிற்கு நாமினேஷன் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் அருகில் உள்ள KSFE கிளையினை அணுக வேண்டும்.

கேரளா

கேரளாவில் இருந்து வெளிநாடு சென்று பணிபுரியும் 23.63 லட்சம் நபர்களில் 90 சதவீதத்தினர் மத்திய கிழக்கு நாடுகளில் தான் பணிபுரிவதாகச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. அதிலும் 38.7 சதவீதத்தினர் ஐக்கிய அமீரகத்திலும், 25.2 சதவீதத்தினர் சவுதி அரேபியாவிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

Kerala CM Pinarayi Vijayan to launch NRI chit Scheme in UAE next month