ஐடி வேலையை உதறி தள்ளி இளநீர் விற்கும் மணிகண்டன்..!

கடுமையான கோடை காலத்தில் இளநீரைத் தவிர உற்சாகமூட்டும் பானம் வேறென்ன இருக்க முடியும். இந்திய நகரங்களில் உள்ள பெரும்பாலான தெருக்களில் பல இளநீர் விற்பனையாளர் வரிசைகட்டி நின்று மக்களின் தாகத்தைத் தணித்து வருகின்றனர். இதையே தான் தொழில்முறையாகச் செய்து வருகிறார் மணிகண்டன்.

மணிகண்டன்

ஒவ்வொரு முறையும் இளநீருக்காக ஏங்கும் போதும் , காரை நிறுத்தி சாலையோர கடைகளில் ஏன் வாங்குகிறோம் என்பதை விரைவில் உணரத்துவங்கினார் மணிகண்டன்.

இயற்கையிலேயோ அதிகப் புரதச் சத்து வாய்ந்த இளநீரை விட ஏன் மற்ற காற்றடைக்கப்பட்ட பானங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதையும் புரிந்துகொண்டார். எளிதில் அணுகமுடிதல் மற்றும் எளிதாக நுகர்தல் என்பதைத் தான் இரு முக்கியக் காரணிகள்.

 

அசென்சர் வேலையை

அப்போது தான் டென்கோ என்னும் யோசனையைக் கண்டறிந்தார். விவசாயக் குடும்பப் பின்புலத்தில் இருந்து வந்த மணிகண்டனுக்கு, எப்படி இளநீரை எளிதில் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும் என்ற உறுதியை உணர வைத்தது. விரைவில் தனது அசென்சர் நிறுவன வேலையை விட்டுவிட்டு தனது நிறுவனத்தைத் துவங்கினார்.

எளிய முறை

இளநீரைச் சீவக்கூடிய இயந்திரத்தை அவர்களே வடிவமைத்தனர். அதன் மூலம் யார் வேண்டுமானாலும் இளநீரைச் சிறு கத்தி அல்லது கரண்டியை வைத்துத் திறக்க முடியும்.

வர்த்தக வளர்ச்சி

மேலும் அவர்களே இளநீர் திறப்பான் ஒன்றையும் வடிவமைத்துள்ளனர். அதைக்கொண்டு குழந்தைகள் கூட அதிகச் சிரமமின்றி இளநீரைத் திறக்க முடியும். "தற்போது நாங்கள் நாளொன்றுக்கு 4000 இளநீரை விற்கின்றோம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நாளொன்றுக்கு வெறும் 50 இளநீர் விற்பனை செய்து தான் தொழிலை துவங்கினோம்" என்கிறார் மணிகண்டன்.

கட்டமைப்புகளை உருவாக்குதல்

டென்கோ நிறுவனம் தனது முதல் இயந்திரத்தை மூன்று மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே வடிவமைத்துவிட்டது.

"முதலில் அக் கருவியை எங்கள் நண்பர்களின் கொடுத்துப் பின்னூட்டம் கேட்டோம். அவர்களும் நல்ல முடிவுகளையே கூறினர். அப்படித் தான் இளநீரைச் சீவும் எங்கள் பயணத்தைத் துவங்கினோம்" என்கிறார்.

 

இளநீர் சந்தை

ஒருங்கிணைக்கப்படாத இளநீர் சந்தையை, எளிதில் அணுகக்கூடியதாகவும், நுகரக்கூடியதாகவும் மாற்றுவதே எங்களின் முயற்சியாக இருந்தது எனக் கூறும் மணிகண்டன், டென்கோ நிறுவனத்தைத் துவங்க நினைத்த உடனேயே 20 ஆண்டுகள் தன்னுடன் பணியாற்றிய அர்பிதா பகுகுணா என்பவரையும் இணைத்துக்கொண்டார்.

வெற்றி அணி

மென்பொருள் தளங்களை வடிவமைப்பதில் 13 ஆண்டுகள் அனுபவம் பெற்ற அர்பிதா, டென்கோவில் தொழில்நுட்ப பிரிவை வழிநடத்துகிறார். வெஜ்வாலா எனும் ஸ்டார்அப்-ஐ துவங்கி டெலிவரி செய்வதில் நல்ல அனுபவம் பெற்றவர் சந்தோஷ் படேல். பல்வேறு பெரு நிறுவனங்களில் பணியாற்றிய அக்சய், சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பர பிரிவில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். விற்பனை பிரிவில் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, குழுவின் மிகவும் இளைய உறுப்பினரான கௌதம் ஆற்றலின் மொத்த உருவம்.

இயந்திர வடிவமைப்பு

கடைசியாக இந்நிறுவனத்தின் இயந்திரம் மற்றும் திறப்பானுக்கு மூளையாக இருந்தவர் விஷ்ணு. பிட்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டதையும், முதுகலைப் பட்டத்தை அமெரிக்காவிலும் பெற்ற இவர், இந்தியா திரும்பியதும் தனக்கு விருப்பமான இயந்திர வடிவமைப்பில் இறங்கினார்.

உள்ளூர் விற்பனையாளர்கள்

அனைவரும் குழுவாக ஒன்றிணைந்த பின்பு, மூலப்பொருளைப் பெறுவது ஒன்றும் கடினமாக இருக்கவில்லை. அவரவர் தங்களுக்குப் பரிச்சயமான துறைகளில் இருந்து தேவையான பொருட்களைப் பெற உதவினர். இளநீர் தேங்காய்களைப் பெற, உள்ளூர் விற்பனையாளர்களிடம் பேசி எப்போதும் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டனர்.

விநியோகம் மற்றும் வருவாய்

" நாங்கள் ஒவ்வொரு நாளும் 50 இளநீரை விற்று தான் எங்கள் தொழிலை துவங்கினோம். தற்போது தினமும் 4,000 இளநீரை விற்பனை செய்கிறோம். எங்களின் மாத வருமானம் ரூ.30 லட்சத்தை எட்டியுள்ளது. இந்தக் கோடை காலத்தில் இது இருமடங்காகும் என நம்புகிறகு இந்த அணி.

முக்கியக் கடைகள்

டென்கோ நிறுவனம் தற்போது ஹைப்பர்சிட்டி, ஃமோர், பிக்பஜார், மெட்ரோ, நீல்கிரீஸ், நம்தாரீஸ், நேட்சர்ஸ் பேஸ்கெட் போன்ற கடைகளுக்கும், அமேசான், பிக் பேஸ்கெட், குரோப்பர்ஸ், ஜோப்நவ் மற்றும் தூத்வாலா போன்ற இணையவழி கடைகளுக்கும் இளநீரை வழங்கி வருகிறது.

ஹோம் டெலிவரி

வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று இளநீரை வழங்கும் திட்டத்தையும் நாங்கள் துவங்கியுள்ளோம். தற்போது வரை 5 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இளநீரை வழங்குகிறோம். இதற்குப் பெரும் வரவேற்றுக் கிடைத்துள்ளதால் மேலும் சில பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளது டென்கோ.

சந்தை நிலவரம்

டெக்சி நிறுவனத்தின் அறிக்கைப்படி, பாட்டிலில் அடைக்கப்பட்ட இளநீரின் சந்தை 2016ல் 15.38 மில்லியன் டாலராக இருந்தது. இது 2017-22 ஆண்டுகளில் 17 சதவீத வருடாந்திர வளர்ச்சியாக அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ல் சந்தை மதிப்பு 40.73 மில்லியன் டாலராக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மன்பாசந்த்

வதோதராவை சேர்ந்த மன்பாசந்த் போன்ற பல நிறுவனங்களும் இந்த வர்த்தகத்தில் இறங்கியுள்ளன. மேலும் பல பெரு நிறுவனங்களும் இத்துறையில் கால்பதிக்க ஆர்வமாக உள்ளதாகவும் அறிக்கை மேலும் கூறுகிறது.

பெங்களுரூ

தற்போது பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் விரைவில் சென்னை, ஹைதராபாத், பூனே, மும்பை, டெல்லி நகரங்களுக்கும் விரிவுபடுத்த உள்ளது. மேலும் தேங்காய்ச் சம்பந்தப்பட்ட பொருட்களான தேங்காய் பால், தேங்காய் சர்க்கரை, தேங்காம் எண்ணெய் போன்ற பல பொருட்களை அறிமுகப்படுத்த உள்ளது.

அடுத்தகட்ட வளர்ச்சி திட்டம்

கழிவு மேலாண்மை பிரிவிலும் தற்போது பணியாற்றி வருகிறோம்.அதில் நல்ல பலனும் கிடைக்கிறது. தேங்காய் கழிவுகளைப் பயன்படுத்தி நார், கரி போன்ற பொருட்களையும், உயர்தர உரங்களையும் தயாரிக்கின்றோம். இதை விவசாயிகள் பயன்படுத்துவதன் மூலம் நல்ல சுற்றுப்புற சூழலும் கிடைக்கிறது. ஆண்டுக்கு இளநீரின் சந்தை மதிப்பு மட்டும் ரூ12,000 கோடி. தேங்காய்ச் சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பை துவங்கும் முன்பு தேங்காய் சந்தையின் 1% (120 கோடி) ஆவது கைப்பற்ற விரும்புகிறோம் என்கிறார்.

Have a great day!
Read more...

English Summary

Quit his IT job to sell tender coconut