முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தொடர்ந்து அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில் தற்போது தனது வர்த்தகத்தையும், முதலீட்டையும் அதிகரிக்க முக்கிய முடிவை ரிலையன்ஸ் நிர்வாகக் குழு எடுத்துள்ளது.

ரிலையன்ஸ் பிசினஸ் மாடல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தில் முகேஷ் அம்பானியின் வாரிசுகள் வந்த பின்பு இக்குழுமத்தின் வர்த்தகக் கவனம் பெட்ரோலிய, டெக்ஸ்டைல் துறையைத் தாண்டி ரீடைல் மற்றும் டெலிகாம் வர்த்தகம் மீது திரும்பியது.

இது வெற்றிப்படிகளாக அமைந்த நிலையில் தற்போது அடுத்தகட்டத்திற்குச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

வருவாய்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த வருமானத்தில் ஜியோ மற்றும் ரீடைல் பிரிவின் வருமானம் 2016-17இல் வெறும் 2 சதவீதமாக இருந்த நிலையில் 2017-18இல் இதன் அளவு 13.1 சதவீதமாக உயர்ந்து இந்நிறுவனத்தின் வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

முக்கிய முடிவு

இதே வேகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் தயார் நிலையில் உள்ளது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் புதிய முதலீடு ஈர்க்கவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் முடியும்.

 

முதலீட்டாளர்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பங்குதாரர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்துப் பேசுகையில், நுகர்வோர் வர்த்தகப் பிரிவு போதுமான அளவிற்கு உயர்ந்த பின்னர்ப் பங்குச்சந்தையில் பட்டியலிடலாம் எனக் கடந்த பங்குதாரர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தப் பங்குதாரர்கள் கூட்டம் வருகிற ஜூலை 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

வர்த்தக மாற்றம்

அடுத்த 10 வருடத்தில் ரிலையன்ஸ் குழுமத்தில் தற்போது வருவாய் அதிகம் தரும் முக்கியப் பரிவாக இருக்கும் எனர்ஜி மற்றும் மெட்டிரீயல்ஸ் பிரிவை நுகர்வோர் வர்த்தகம் பின்னுக்குத் தள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ

2017-18ஆம் நிதியாண்டில் 23,916 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளது, இதில் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய அளவீட்டில் 3,174 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல்

இதேபோல் ரீடைல் பிரிவு வர்த்தகம் 2016-17ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2017-18இல் இரட்டிப்பு வருமானத்தைப் பெற்றது. 2017-18இல் மட்டும் இப்பிரிவு 69,198 கோடி ரூபாயை மொத்த வருமானமாகப் பெற்றது இதில் EBIT அளவு 2,063 கோடி ரூபாயாகும்.

இப்பிரிவின் அதிகப்படியான EBIT அளவு இதுதான்.

 

Have a great day!
Read more...

English Summary

Reliance Jio and Reliance Retail are ready to go public