ஒரு வருடத்தில் இந்தியாவிற்கு வந்த 69 பில்லியன் டாலர் அந்நியச்செலாவணி, என்ஆர்ஐ-களுக்கு நன்றி!

உலகம் முழுவதிலும் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களது சொந்த நட்டிற்கு எவ்வளவு அந்நியச்செலாவணி அனுப்பியுள்ளார்கள் என்ற அறிக்கையினை ரெமிட்ஸ்கோப் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 2017-ம் ஆண்டு இந்தியர்கள் 69 பில்லியன் டாலரினை அனுப்பிச் சாதனை படைத்துள்ளனர்.

முதல் இடம்

உலகளவில் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தான் தங்களது நாட்டிற்கு அதிகளவில் பணத்தினை அனுப்பியுள்ளதாக ரெமிட்ஸ்கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா

இந்தியாவிற்கு அடுத்தபடியாகச் சீன மக்கள் 64 பில்லியன் டாலரினையும், மூன்றாம் இடத்தில் பிலிப்பைன்ஸ் மக்கள் 33 பில்லியன் டாலரினையும் தங்களது நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான்

டாப் 10 நாடுகளில் பட்டியலில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் 20 பில்லியன் டாலரினையும், வியாட்நாம் வெளிநாட்டு ஊழியர்கள் 14 பில்லியன் டாலரினையும் தாய் நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

2030

2030-ம் ஆண்டில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு 6 டிரில்லியன் டாலர் வரை வெளிநாட்டில் இருந்து அந்நியச்செலாவணி அனுப்ப வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

India received $69bn remittance in 2017. Thanks To NRI'S